தாவத் கர்மாணி குர்வீத ந நிர்வித்யேத யாவதா
மத்-கதா-ஸ்ரவணாதௌ வா ஸ்ரத்தா யாவன் ந ஜாயதே
மொழிபெயர்ப்பு
எதுவரையில் கர்மத்தில் திருப்தியடையவில்லையோ, எதுவரையில் என் கதை முதலியவற்றைக் கொண்ட பக்தித்தொண்டில் சிரத்தை உண்டாகவில்லையோ அதுவரையில் ஒருவன் வேத விதிகளுக்கேற்பவே செயற்பட வேண்டும்.
பொருளுரை
தூய பக்தர்களுடன் சகவாசம் கொண்டு பகவத் தொண்டில் முழு நேர ஈடுபாடு கொள்வதன் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் திட நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தாலொழிய ஒருவன் சாதாரண வேதக் கோட்பாடுகளையும், கடமைகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது. இதை பகவானே பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
ஸ்ருதி-ஸ்ம்ருதி மமைவாக்ஞே யஸ் தே உல்லங்ய வர்ததே
ஆக்ஞா-ச்சேதீ மம த்வேஷீ மத்-பக்தோ ’பி ந வைஷ்ணவ:
“சுருதி மற்றும் ஸ்மிருதி சாஸ்திரங்கள் எனது கட்டளைகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டளைகளை மீறுபவன் எனது விருப்பத்தை மீறி என்னை எதிர்ப்பவனாகிறான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய ஒருவன் தன்னை எனது பக்தன் என்று கூறிக்கொண்டாலும், உண்மையில் அவன் ஒரு வைஷ்ணவனல்ல.” பகவானைப் பற்றிக் கேட்பதிலும், பாடுவதிலும் திட நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாதவரை, ஒருவன் சாதாரன வேத விதிகளைப் பின்பற்றியே தீரவேண்டும். ஒருவரை முன்னேற்றமடைந்த பக்தராக அறிவதற்குரிய அறிகுறிகள் பல உள்ளன. ஸ்ரீமத் பாகவதத்தில் (1.2.7) பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
வாஸுதேவே பகவதி பக்தி-யோக: ப்ரயோஜித:
ஜனயதி ஆசு வைராக்யம் ஞானம் ச யத் அஹைதுகம்
உண்மையில் மேலான பக்தித்தொண்டில் ஈடுபட்டிருப்பவன் உடனேயே கிருஷ்ண உணர்வாகிய தெளிந்த ஞானத்தையும், பக்தியற்ற செயல்களிடம் பற்றின்மையையும் வளர்த்துக்கொள்கிறான். இந்தப் பிடியில் நிலையெறாதவன் சாதாரண வேத விதிகளைப் பின்பற்றியே ஆக வேண்டும், மேலும் இத்தகையவன் பரமபுருஷரிடம் பொறாமை கொண்டவனாகும் அபாயமும் உள்ளது. மற்றொருபுறம், கிருஷ்ண பக்தியில் முழு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டவன் பகவானின் விருப்பத்தை நிறைவேற்ற எதைச் செய்யவும் தயங்கமாட்டான். ஸ்ரீமத் பாகவதத்தில் (11.5.41) பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
தேவர்ஷி-பூதாப்த-ந்ருணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மனா ய: சரணம் சரண்யம்
கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம்
“எல்லாவித கடன்பட்ட நிலைகளையும் துறந்து, முக்தியளிப்பவரான முகுந்தனின் தாமரைப் பாதங்களை உறுதியாகத் தஞ்சமடைந்தவன் தேவர்கள், முனிவர்கள், பொதுவான ஜீவராசிகள், குடும்ப அங்கத்தினர்கள், மனிதர்கள் அல்லது பித்ருக்கள் ஆகிய எவருக்கும் கடமைப்பட்டவனோ, கடன்பட்டவனோ அல்ல.”
இது தொடர்பாக ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஒருவன் முழுமையாகச் சரணடையும்போது, அவன் பகவானின் வாக்குப்படி எல்லாச் கடமைகளிலிருந்தும், அவன் பகவானின் வாக்குப்படி எல்லாக் கடமைகளிலிரு.ந்தும், கடன்களிலிருந்தும் விடுபட்டு அவரது அடைக்கலத்தைப் பெறுகிறான். “நான் காப்பாற்றுவேன்” என்ற பகவானின் வாக்குறுதியைத் தியானிப்பதன் மூலம் பக்தன் பயனற்றவனாகிறான். ஆனால் ஜடப் பற்றுடையவர்கள் பரமபுருஷரிடம் முழு சரணடைவதில் அச்சம் கொண்டு, பகவானிடம் கொண்டுள்ள விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றனர்.
( ஶ்ரீமத் பாகவதம் / 11.20.9 / பொருளுரை வழங்கியவர்: ஶ்ரீல பிரபுபாதர் )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment