துங்கவித்யா தேவி
ஸ்ரீமதி ராதாராணியின் மிகவும் நெருங்கிய தோழிகள்
பல ஆயிரம் கோபியர்களில் பதினாறாயிரம் பேர் முதன்மையானவர்கள் என்றும், அவர்களில் 108 கோபியர்கள் மிக நெருக்கமானவர்கள் என்றும், 8 பேர் இன்னும் முக்கியமானவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீராதையும் சந்திராவல்லியும் அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். ஸ்ரீராதையோ அனைவரிலும் மிகவும் முக்கியமானவர். ஏனென்றால், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கவரும் அத்தனை வசீகரமும், இனிமையும் ஸ்ரீ ராதைக்கு மட்டுமே உண்டு.
ஸ்ரீ ராதாராணியை விட துங்கவித்யா தேவி 15 நாட்கள் இளையவர். துங்கவித்யா தேவி குங்கும நிறத்தையும், கற்பூரம் கலந்த சந்தன நறுமணத்தையும் உடையவர். மேலும் வெண்மை நிற ஆடைகளை அவர் மிகவும் விரும்பி அணிகிறார். துங்கவித்யா தேவி கொஞ்சம் முன்-கோபம் கொள்ளும் குணம் உடையவர். ரச-சாஸ்திரம், நிதி- சாஸ்திரம், நடனம், நாடகம், இலக்கியம் மற்றும் 18 புராணங்களையும் கற்றுத் தேர்ந்தவர். பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும், அதை பிறருக்கு கற்றுத்தருவதிலும் துங்கவித்யா தேவி மிகவும் நிபுணத்துவம் கொண்டவளாவர். தன்னுடைய இசையினால் ஶ்ரீ ராதா கிருஷ்ண திவ்ய தம்பதிகளை மகிழ்விப்பவள்.
ஸ்ரீராதையும் கிருஷ்ணரும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்பவர். இவர் பிறந்த இடம் தபரா கிராமம் என்று கூறப்படுகிறது. துங்கவித்யா தேவியின் தந்தை புஷ்கரா, தாய் மேதா, கணவர் பலிஷா. மஞ்சுமேதா, சுமதுரா, சுமதியா, மதுரேக்சனா, தனுமத்யா, மதுஸ்யந்தா, குணசூடா, மற்றும் பரங்கதா முதலிய சகிகள் இவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் நடனத்தில் தலைசிறந்த கோபிகைகளாவர். துங்கவித்யாவின் தலைமையில் பிருந்தாவனத்தின் சுனைகலிளிருந்து தண்ணீர் கொண்டு வருவது முதலிய பணிகளை இவர்கள் செய்கின்றனர்.
கௌரங்க லீலையில் துங்கவித்யா தேவி, வக்ரேஷ்வர பண்டிதராக வந்து லீலைகளை புரிந்தார்.
ஆதாரம் : ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ண கனோதேச தீபிகா மற்றும் ஸ்ரீல கவி கர்ணபூரின் ஸ்ரீ கௌர கணோதேச தீபிகா, கௌர கோவிந்தர்சன ஸ்மரண பத்ததி மற்றும் உஜ்வல நீலாமணி.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment