பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவரது தூய பக்தர்களின் உடைமையாவார். இதன் விளைவாக பக்தர்களால் மட்டுமே மற்றொரு பக்தனுக்கு கிருஷ்ணரை வழங்க முடியும்; கிருஷ்ணரை நேரடியாக அடையவே முடியாது. எனவே பகவான் சைதன்யர் தம்மை, “பிருந்தாவனத்து கோபியர்களை பரிபாலித்து வருபவரான பகவானின் தொண்டர்களிடம் மிகவும் கீழ்ப்படிந்துள்ள தொண்டன்” (கோபீ-பர்து: பத-கமலயோர் தாஸ-தாஸானுதாஸ:) என்று கூறிக் கொண்டார். ஆகவே தூய பக்தன் பகவானை நேரடியாக அணுக முயலாமல், பகவானின் தொண்டர்களுக்கும் தொண்டனை திருப்திப் படுத்த முயல்கிறான். இதனால் பகவான் திருப்தியடைகிறார். அதன் பிறகு மட்டுமே பகவானின் தாமரைப் பாதங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூளசி இலைகளின் சுவையை பக்தனால் அனுபவிக்க முடியும். பிரம்ம-சம்ஹிதையில், வேத இலக்கியங்களில் பெரும் பண்டிதர்களால் மட்டும் பகவானைக் கண்டுவிட முடியாது என்றும், அவரது தூய பக்தர்களின் மூலமாக மட்டுமே மிகச் சுலபமாக அவரை அணுக முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிருந்தாவனத்தில் தூய பக்தர்கள் எல்லோரும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் இன்பச் சக்தியாகிய ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை வேண்டி பிரார்த்திக்கின்றனர். ஸ்ரீமதி ராதாராணி, பௌதிக பெண்மைக்குரிய தன்மையின் பரிபூர்ண நிலையை ஒத்திருக்கிறார். இளகிய மனம் படைத்தவரான அவர் பகவானின் ஒத்த பாகமாவார். எனவே ராதாராணியின் கருணை உண்மையுள்ள பக்தர்களுக்கு உடனே கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. அத்தகைய பக்தனை பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அவள் ஒரு முறை சிபார்சு செய்ததும், பகவான் உடனே அந்த பக்தனை தமது சகவாசத்திற்குள் நுழைய அனுமதிக்கிறார். எனவே, நேரடியாக பகவானின் கருணையைச் சம்பாதிப்பதைவிட பக்தனின் கருணையைச் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவனாக ஒருவன் இருக்க வேண்டும் என்பதே இதன் தீர்மானமாகும். இவ்வாறு செய்வதால் (பக்தனின் தயையினால்) பகவத் தொண்டிற்குரிய இயல்பான கவர்ச்சி மீண்டும் எழுப்பப்படுகிறது.
ஶ்ரீமத் பாகவதம் 2.3.23 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment