அதிகரித்துக் கொண்டே போகும் பகவானின் அழகினை வர்ணிக்கப் போதுமான வார்த்தைகள் கிடையாது. பகவானின் உலக மற்றும் ஆன்மீகப் படைப்புக்களிலேயே எழில் நலம் மிக்கவள் அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமியே ஆவாள்; தான் மிக்க அழகுடையவர் என்னும் உணர்வு அவளிடம் இருக்கிறது, இருந்தும் பகவான் முன்னால் அவளது அழகு தோற்கடிக்கப்பட்டது. அதாவது பகவானின் முன்னர் இலட்சுமி தேவியின் அழகு இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது என்று கூறலாம். வைணவக் கவிஞர்களின் வார்த்தைகளின்படி கண்ணைக் கவரும் பகவானின் அழுது ஆயிரம் மன்மதன்களைத் தோற்கடிக்கக் கூடியதாகும். ஆதலினாலேயே அவர் மதன மோஹனன் என்றழைக்கப்படுகிறார். மேலும் பகவான் கூட சில நேரங்களில் ராதா ராணியின் அழகில் மயங்குகிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கவிஞர்கள், அச்சூழ்நிலைகளின் கீழ் பகவான் மதன மோஹனனாக இருந்த போதிலும் கூட அவர் மதன தாஹன் அல்லது ராதாராணியின் அழகில் மயங்கியவர் என்று விளக்குகின்றனர். உண்மையில் பகவானின் எழிலானது மேன்மை மிக்கதாகும். அது வைகுண்ட லோகத்திலுள்ள இலட்சுமி தேவியின் எழிலையும் வெல்லக் கூடியதாகும். வைகுண்ட லோகத்திலுள்ள பகவானின் பக்தர்கள் பகவானை அழகில் சிறந்தவராகக் காண விரும்புகின்றனர். ஆனால் கோகுலம் அல்லது கிருஷ்ண லோகத்திலுள்ள பக்தர்கள் கிருஷ்ணரைக் காட்டிலும் அழகு மிக்கவராக ராதாராணியைக் காண விரும்புகின்றனர். இதில் சரிக்கட்டுகின்ற முறை என்னவென்றால் தனது பக்தர்களை மகிழ்ச்சியடையச் செய்யவர் எனும் பொருள்தரும் “பக்தவத்ஸலம்” என்னும் பெயரையுடைய பகவான் இத்தன்மைகளை மேற்கொள்வதினாலேயே சிவபெருமான், பிரம்மதேவன், பிற தேவர்கள் போன்ற பக்தர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்கிறார். இங்கும் கூட பக்த முனிவர்களான குமாரர்களுக்காக பகவான் தனது எழில்கோலத்துடன் காட்சி தந்தார். அவர்களும் தங்கள் விழிகளினால் பகவானை விழுங்கி விடுவது போல் ஆவல் தீராது தொடர்ந்து அவரை பார்த்துக் கொண்டேயிருந்தனர்.
ஶ்ரீமத் பாகவதம் 3.15.42 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment