பகவானுக்குச் செய்யும் திவ்யமான தொண்டு பௌதிகமானதல்ல. பக்தனின் தொண்டு செய்யும் மனப்பான்மை படிப்படியாக வளர்ச்சியடைகிறதே தவிர, ஒருபோதும தளர்ச்சியடைவதில்லை. பொதுவாக முதுமையடைந்த ஒருவர் பௌதிக சேவையிலிருந்து ஒய்வுபெற அனுமதிக்கப்படுகிறார். ஆனால் உன்னதமான பகவத் தொண்டில் ஒய்வு பெறுவதற்கு சிறிதும் இடமில்லை மாறாக, வயது முதிர முதிர தொண்டு செய்யும் மனப்பானமை அதிகரித்துக் கொண்டே போகிறது. பகவானின் உன்னதமான தொண்டில் சலிப்பே ஏற்படுவதில்லை என்பதால், அதில் ஒய்வுபெறுவதற்கும் இடமில்லை. தேகத்தால் பௌதிக சேவை செய்து களைப்படைந்த ஒரு மனிதன், ஒய்வு பெற அனுமதிக்கப்படுகிறான். ஆனால் உன்னத தொண்டில் களைப்பே ஏள்படுவதில்லை. ஏனெனில் அது ஆன்மீகத் தொண்டாகும், உடல் மட்டத்தில் உள்ளதல்ல. உடல் மட்டத்திலுள்ள செயல் வயது முதிர்ச்சியினால் படிப்படியாக நலிவடைந்துவிடுகிறது. ஆனால் ஆத்மா முதுமையடைவதேயில்லை என்பதால், ஆன்மீகப் படித்தரத்திலுள்ள சேவைகள் களைப்பை ஏற்படுத்துவதில்லை.
உத்தவர் வயது முதிர்ந்தவராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது உற்சாகம் முதுமையடைந்தது என்பது அதன் பெருளல்ல. சேவை செய்யும் அவரது மனப்பான்மை பக்குவமடைந்து உன்னதமான படித்தரத்தில் இருந்ததால், ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி விதுரரால் கேள்வி கேட்க்கப்பட்டதும் தன் பகவானைப் பற்றிய சிந்தனை உடனேயே அவருக்கு வந்து வட்டதால், தமது முதுமையை அவர் முற்றிலும் மறந்துபோனார். இதுவே பகவானுக்குத் தூய பக்தித் தொண்டு செய்வதற்குரிய அடையாளமாகும். (லக்ஷணம் பக்தி-யோகஸ்ய).
ஶ்ரீமத் பாகவதம் 3.2.3 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment