மரணத்தை வெல்லும் அறிவு


மரணத்தறுவாயில் ஒவ்வொரு உயிரும் தன் மனைவி, மக்களுக்கு என்ன நேருமோ என்று கவலைப்படுகிறான். அதுபோல் ஓர் அரசியல்வாதி நாட்டுக்கும், தன் கட்சிக்கும் என்ன நேருமோ என்று கவலைப்படுகிறான். ஒருவன் முழுதும் கிருஷ்ண உணர்வு பெறவில்லையென்றால், அவன் எந்த உணர்வு நிலையில் இறக்கிறானோ அதற்கேற்ப மறுபிறவியில் உடலைப் பெறுகிறான். மன்னர் புரஞ்ஜனன் முற்றிலும் தம் மனைவி மக்களின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தார். எனவே அவர் ஒரு பெண்ணின் உடலை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிறது. அதுபோல் தான் பிறந்த நாட்டின் மீது அதிகப் பற்றுடைய அரசியல்வாதி தன் வாழ்வு முடிந்தபிறகு மீண்டும் அநித நாட்டிலேயே பிறக்கிறான். இம்மையில் ஒருவன் செய்யும் செயல்களின் விளைவு மறுமையிலும் அவனைப் பாதிக்கிறது. சிலநேரங்களில் அரசியல்வாதிகள் தங்கள் புலனுகர்ச்சிக்காக கொடிய பாவங்களைச் செய்கின்றனர். எதிர்க்கட்டிசியை அழிப்பது ஒரு அரசியல்வாதிக்கு அசாதாரணமன்று. ஒரு அரசியல்வாதி அவனது தாய் நாட்டிலேயே மீண்டும் பிறந்தால் கூட அவன்தன் முந்தைய வாழ்வில் செய்த பாவங்களின் பலன்களை அனுபவித்தே தீர வேண்டியதாகிறது.


இடம்பெயரும் இந்த நிலையானது, நவீனவிஞ்ஞானிகள் முற்றிலும் அறியாத ஒன்றாகும். அவர்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதுமில்லை. ஏனெனில் இவர்கள் இந்நுண்மையான பொருளைப் பற்றியும், உயிரின் பிரச்சினைப் பற்றியும் சிந்தித்தார்கனென்றால், அவர்கள் எதிர்காலத்தை இருள்மயமாகக் காண்பர். இவ்வாறு எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் சமுதாயம், அரசியல் மற்றும் தேசியத் தேவைகள் என்ற பெயரில் பல்வேறு வகையான பாவங்களையும் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.


ஒவ்வொரு தனிப்பட்ட ஆத்மாவும், வாழ்க்கையில் தான் செய்யும், பாவ, புண்ணியங்களுக்குப் பொறுப்பு என்பதை மூட மனிதர்கள் அறிந்திலர். ஓர் உயிர் ஒரு குழந்தை வடிவில் அல்லது அறியாத பாலகனாக இருக்கும் பொழுது வாழ்க்கையின் மதிப்புக்களை முறையாக அவனை அறிந்து கொள்ளச் செய்யும் கடமை தாய், தந்தைக்கு உரியதாகும். அக்குழந்தை பெரியவனாகி விட்டால் வாழ்க்கைக் கடமைகளை முறையாக நிறைவேற்றும் பொறுப்பு அவனிடமே விடப்படுதல் வேண்டும். இறந்த பிறகு பெற்றோரால் தங்கள் குழந்தைக்கு உதவ முடியாது. தனது குழந்தையின் உடனடி உதவிக்காக ஒரு தந்தை சில சொத்துக்களை விட்டுச் செல்லலாம், அதற்காக அவன் தான் இறந்த பிறகு தன் குடும்பம் என்னவாகுமோவென்று ஆழ்ந்த கவலையில் மூழ்கிவிடக் கூடாது. இதுதான் கட்டுண்ட ஆத்மாவிடம் இருக்கும் நோயாகும். தனது புலனுகர்ச்சிக்காக மட்டும் அவன் பாவச் செயல்களில் ஈடுபடுவதில்லை. அவன் தான் இறந்த பிறகு, ஏராளமான செல்வங்களை தன் குழந்தைகளுக்கு விட்டுச் செல்கிறான், அதன் உதவியால் அக்குழந்தைகளும் தங்கள் புலனுகர்ச்சியை எண்ணி ஆடம்பரமாக வாழ்கின்றனர்.

எல்லோரும் மரணத்தைக் கண்டு பயப்படுகின்றனர். அதனால் மரணம்பயம்என்று அழைக்கப்படுகிறது. மன்னர் புரஞ்சனன் தம் மனைவி மக்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார் என்பதற்காக, மரணம் அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. மரணம் எந்தவொரு மனிதனுக்காகவும் காத்திருப்பதில்லை; அது விரைந்து தன் கடமையைச் செய்கிறது. எந்தவிதத் தயக்கமுமின்றி உயிர்களை எடுத்துச் சென்றுவிடுகிறது. அதனால் நாடு, சமுதாயம், உறவினர் என்று சிந்தித்து இறை உணர்வினைப் புறக்கணித்து வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்ட நாத்திகர்களுக்கு மரணமே இறுதி இறைவுணர்வாக இருக்கிறது. இச்சுலோகத்தில் உள்ளஅதத் அர்ஹணம்என்னும் சொல்லை நோக்குக. ஒருவன் அளவுக்கு மீறி குடும்பம், நாடு, சமுதாயம், இனம் போன்றவற்றிற்கான நலச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதே இதன்பொருள். இவையெதுவும் ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவாது. தீவினைவயத்தால், இன்றுள்ள சமுதாயத்திலிருக்கும் கற்றறிந்தோர் என்பவர்க்கு ஆன்மீக வளர்ச்சியைப் பற்றி எதுவும் தெரியாது. மனித வடிவு கொண்ட வாழ்க்கையில் ஆன்மீக வளர்ச்சிக்கான வாய்ப்பு அவர்களுக்கு இருந்த போதிலும் அவர்கள் உலோபிகளாகவே இருக்கின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையினை முறையின்றி பயன்படுத்தி தங்கள் உறவினர், நாட்டினர், சமுதாயம் போன்றவற்றின் நலன்களைச் சிந்தித்து தங்களையே வீணாக்கிக் கொள்கின்றனர். ஒருவனது உண்மையான கடமை மரணத்தை எப்படி வெல்வது என்பதேயாகும். பகவத்கீதையில் (4.9) பகவான் கிருஷ்ணர் மரணத்தை வெல்வதற்கான முறையினை விளக்குகிறார்:

ஜன்ம கர்ம மே திவ்யம்
ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி ஸோ () ர்ஜுன

எனது உன்னதத் தன்மை கொண்ட தோற்றத்தையும், செயல்களையும் எவன் அறிகிறானோ அவன் தன் உடலை விட்டுப் பிரிந்த பின்னர் மீண்டும் இந்த உலகில் பிறப்பதில்லை. மாறாக அவன் எனது நித்திய உறைவிடத்தினை அடைகிறான், , அர்ஜுனா.”

முற்றிலும் கிருஷ்ண உணர்வுடைய ஒருவன் தன் உடலைப் பிரிந்த பிறகு மற்றொரு உடலைப்பெறுவதில்லை மாறாக வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளை அடைகிறான். இவ்வாறிருப்பதற்ப் பதிலாக மக்கள் சமுதாயம், நட்பு, காதல், உறவு என்னும் சிந்தனைகளில் பலர் மூழ்கியிருக்கின்றனர். ஆனால் கிருஷ்ண பக்தி இயக்கம் உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் மரணத்தை எவ்வாறு வெல்வது என்பது பற்றி கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. “ஹரிம் விநா ஸ்ருதிம் தரந்தி”. முழுமுதற்கடவுளைச் சரண் புகவில்லையென்றால், ஒருவனால் மரணத்தை ஒருக்காலும் வெல்ல முடியாது.


ஶ்ரீமத் பாகவதம் 4.28.21 - 22  / பொருளுரை


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more