ஸ்ரீமதி ராதாராணியின் மிகவும் நெருங்கிய தோழிகளில் இவரும் ஒருவர்.
பிருந்தாவனத்தின் ராணியான ஸ்ரீராதைக்கு சகி (தோழி), ப்ரிய-சகி (அன்புத் தோழி), பரமப்ரேஸ்ட/வரிஷ்ட சகி (நெருங்கிய), ப்ராண சகி (உயிர்த்தோழி) மற்றும் நித்திய சகி (பிரியா தோழி) என்று 5 வகையான சகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. உஜ்வல நீலமணி (4.50)
ராதாராணியை விட இவர் 26 நாட்கள் பெரியவர். குங்குமம் போன்ற சிவப்பு நிறத்தை உடையவர். ஸ்படிக நிற ஆடைகளை விரும்பி அணிகிறார். கவிதைகள் மற்றும் சாஸ்திரங்களில் உள்ள சூக்ஷ்மமான அர்த்தங்களை புரிந்துகொள்வதில் இவர் மிகவும் சாமர்த்தியம் உள்ளவர். மிகவும் சாந்த குணம் கொண்டவர். சமையற் கலையில் நல்ல அனுபவம் மிக்கவர். பலவிதமான அமுத பானங்களை தயாரித்து திவ்ய ஜோடிகளுக்கு பரிமாறுவார். மேலும் பதார்த்தங்களை கண்ணால் கண்ட மாத்திரத்தில், அதன் மூலப்பொருட்களையும் தரத்தையும் கூறிவிடுவார்.
கிராம்பு மற்றும் மலர் மாலைகளைக் கொண்டு வரும் சேவையில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார். தன் தந்தையைப் போலவே வானியல், ஜோதிடம் மற்றும் தோட்டக் கலை ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தவர். காதலரின் சண்டையில் சமரசம் செய்வதில் திறமையானவர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிழ்ச்சியில் இவர் எப்போதும் திருப்தி அடைகிறார். இவரது தந்தையின் பெயர் சதுரா, தாய் சர்விகா மற்றும் கணவர் பிதரா.
இவர் பர்சனாவிலிருந்து தென்மேற்கே சுமார் 12 கிமீ தொலைவிலுள்ள சிக்சோலி கிராமத்தைச் சேர்ந்தவள் என்று கூறப்படுகிறது. ராசாலிகா, திலகினி, சௌராசென், சுகந்திகா, வாமணி, வாமநயனா, நாகரி மற்றும் நாகவல்லிகா முதலானோர் அவரின் குழுவைச் சேர்ந்தவர்கள். கௌரங்க லீலையில் ஸ்ரீகோவிந்தானந்தராக வந்தார்.
குறிப்புகள்:- ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ண கனோதேச தீபிகா மற்றும் ஸ்ரீல கவி கர்ணபூரின் ஸ்ரீ கௌர கணோதேச தீபிகா மற்றும் உஜ்வல நீலமணி
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment