மொழிபெயர்ப்பு
சர்வ மங்களம் பொருந்திய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய பெருமைகள், நினைவுகள், அவரது தரிசனம், பிரார்த்தனைகள், அவரைப் பற்றி கேட்ட மற்றும் அவரது வழிபாடு ஆகியவை சாதகனின் பாவ விளைவுகளை எல்லாம் உடனே தூய்மை செய்துவிடக் கூடியவையாகும். அவருக்கு எனது வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் தன்னை ஒருவன் விடுவித்துக் கொள்வதற்குரிய மிகச் சிறந்த முறை மிகப் பெரிய அதிகாரியான ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமியால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. நினைவில் கொள்ளுதல், ஆலயத்திற்குச் சென்று விக்கிரகத்தை தரிசித்தல், பகவான் முன்னிலையில் பிரார்த்தனைகள் செய்தல், மற்றும் பகவானின் புகழ் பாடப்படுவதைக் கேட்டல் ஆகியவற்றை ஸ்ரீமத் பாகவதத்திலும், பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளவாறு, கீர்த்தனமாகவும் வேறு முறைகளிலும் நிறைவேற்ற முடியும். இன்னிசைகளுடன் பகவானின் புகழைப் பாட முடியும். ஸ்ரீமத் பாகவதம் அல்லது பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களைப் படிப்பதன் மூலமாகவும் கீர்த்தனத்தை நிறைவேற்ற மூடியும்.
பகவானுடன் தாங்கள் உறவாடவில்லை என்று பக்தர்கள் எண்ணினாலும், பிரத்யட்சமாக தங்கள் முன் அவர் காட்சி தரவில்லை என்றாலும், அதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைய வேண்டிய அவசியமில்லை. பாடுதல், கேட்டல், நினைவில் கொள்ளுதல் போன்ற பக்தி முறைகளை நிறைவேற்றுகதன் மூலமாக, பகவானின் சகவாசத்தை நம்மால் பெற முடியும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அல்லது ராமரின் புனித மாம ஓசையும் கூட சூழ்நிலையை உடனே திவ்யமானதாக மாற்றிவிடுகிறது. எங்கெல்லாம் அத்தகைய உன்னதமான தூய பக்தித் தொண்டு நிறைவேற்றப்படுகிறதோ அங்கெல்லாம் பகவான் நிச்சயமாக இருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறாக கீர்த்தனத்தை குற்றமற நிறைவேற்றுபவன் பெருமானின் சாதகமான கூட்டுறவைப் பெறுகிறான். அதைப் போலவே, நினைத்தலும், பிரார்த்தனைகளும் மிகத் திறமையான வழிகாட்டலின் கீழ் நிறைவேற்றப்படுமானால், அவை விரும்பிய பலனை நமக்கு அளிக்கும். பக்தித் தொண்டு முறைகளை ஒருவன் புதிதாக உண்டு பண்ணக் கூடாது. ஆலயத்திலுள்ள பகவானின் வடிவத்தை ஒருவன் வழிபடலாம். அல்லது ஒரு மசூதியிலோ, தேவாலயத்திலோ அருவமான முறையில் ஒருவன் பகவானுக்கு பக்தியூட்டும் பிரார்த்தனைகளை அர்ப்பணிக்கலாம். ஆலயத்தில் வழிபடுவதாலோ அல்லது தேவாலயத்தில் பிரார்த்தனைகளைச் செய்வதாலோ, பாவ விளைவுகளிலிருந்து விடுபட்டு விடலாம் என்று எதிர்பார்த்து, வேண்டுமென்றே பாவங்களைச் செய்யும் மனநிலை, நாம்னோ பலாத் யஸ்ய ஹி பாப-புத்தி: என்று அழைக்கப்படுகிறது. மேலும் இதுவே பக்தித் தொண்டை நிறைவேற்றுவதிலுள்ள மிகப் பெரிய குற்றமாகும். எனவே, இத்தகைய பாவப் படுகுழிகளிலு விழுந்து விடாதவாறு தன்னை ஒருவன் பாதுகாத்துக் கொள்வதற்கு, பகவானைப் பற்றி கேட்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். இந்த செவிசாய்க்கும் முறைக்கு விசேஷமான முக்கியத்துவத்தை அளிப்பதற்காக, இவ்விஷயத்தில் சர்வ மங்களகரமான அதிர்ஷ்டத்தை வேண்டி கோஸ்வாமி பிரார்த்தனை செய்கிறார்.
ஶ்ரீமத் பாகவதம் 2.4.15 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment