பகவானைக் காண்பதற்கு செயற்கையான வழிகள் எதுவும் கிடையாது. அது முற்றிலும் பகவானின் அகாரணமான கருணையையே சார்ந்ததாகும்.
பகவானைக் காண்பதற்கு செயற்கையான வழிகள் எதுவும் கிடையாது. அது முற்றிலும் பகவானின் அகாரணமான கருணையையே சார்ந்ததாகும். நாம் விரும்பியபோதெல்லாம் சூரியனை உதிக்கும்படி நாம் உத்தரவிட முடியாது. அதைப் போலவே, பகவானை நம்முன் தோன்றும்படி நாம் உத்தரவிட முடியாது. சூரியன் அதன் முறைப்படி உதயமாகிறது; அதுபோலவேதான் பகவானும் அவரது தனிப்பெரும் கருணையினால் காட்சியளிக்க ஒப்புக் கொள்கிறார். எனவே ஒருவர் பகவானின் பக்தித் தொண்டில் தனக்கென நியமிக்கப்பட்டுள்ள கடமையைச் செய்துகொண்டு, அத்தகைய நல்ல தருணத்திற்காகக் காத்திருக்க வேண்டும் ..
பகவான் ஒருவருக்கும் கடமைப்பட்டவரல்ல. அவரை கலப்பற்ற தூய பக்தியினால் சுலபமாகக் கட்டிவிட முடியும். ஆனால்
பௌதிக புலன்களால் அவரைக் கண்டறிய முடியாது. ஒருவர் பக்தித் தொண்டில் உண்மையான முயற்சியை மேற்கொண்டு, பகவானின் கருணையை முழுமையாக நம்பியிருக்கும்பொழுது,
அதனால் திருப்தியடையும் பகவான் தம்மை
காட்டிக்கொடுக்க விரும்புவாரானால், அப்போது அவரை
நம்மால் காணமுடியும்.
ஶ்ரீமத் பாகவதம் 1.6.19 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment