உயிர்வாழிகள் எவ்வாறு ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலிற்கு மாற்றமடைகின்றனர் என்பதைப் பற்றி அறிந்துகொள்வதில் இந்தப் மிகவும் முக்கியமானதாகும். இரண்டாம் அத்தியாயத்தில், ஆடையை ஒருவன் மாற்றிக் கொள்வதுபோல, உயிர்வாழி ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலிற்கு மாற்றமடைகின்றான் என்று விளக்கப்பட்டது. ஜட வாழ்வின் மீதான அவனது பற்றுதலே இந்த உடை மாற்றத்திற்கு காரணம். இந்த பொய்யான தோற்றத்தினால் அவன் கவரப்பட்டுள்ள வரை, ஓர் உடலி லிருந்து மற்றொரு உடலிற்கு மாறுவதை அவன் தொடரத்தான் வேண்டும். ஜட இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான அவனது விருப்பத் தினால் அவன் இத்தகு விரும்பத்தகாத சூழ்நிலைகளில் வைக்கப்படு கின்றான். பௌதிக ஆசைகளின் காரணத்தினால், ஆத்மா சில சமயம் தேவனாக, சில சமயம் மனிதனாக, சில சமயம் மிருகமாக, சில சமயம் பறவையாக, சில சமயம் புழுவாக, சில சமயம் நீர்வாழியாக, சில சமயம் புனிதமான மனிதனாக, சில சமயம் பூச்சியாகவும் பிறக்கின்றான். இது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இவ்வெல்லா நிலைகளிலும் உயிர்வாழி தன்னையே தனது சூழ்நிலைகளின் தலைவனாக எண்ணிக் கொள்கின்றான், இருப்பினும் அவன் ஜட இயற்கையின் ஆதிக்கத்திற்குக் கீழ்ப்பட்டவனே.
அவன் எவ்வாறு பல்வேறு உடல்களில் வைக்கப்படுகின்றான் என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது. பல்வேறு இயற்கை குணங்களின் தொடர்பே இதற்கு காரணம். எனவே, ஒருவன் ஜட இயற்கையின் முக்குணங்களி லிருந்து உயர்வு பெற்று, தெய்வீக நிலையில் நிலைபெற வேண்டும். இதுவே கிருஷ்ண உணர்வு எனப்படும். ஒருவன் கிருஷ்ண உணர்வில் நிலைபெறாத வரை, ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலிற்கு மாறும்படி அவனது ஜட உணர்வு அவனை பலவந்தப்படுத்தும்; ஏனெனில், நினைவிற்கு எட்டாத காலம் முதல் அவனிடம் ஜட ஆசைகள் உள்ளன. ஆனால் அத்தகு விருப்பங்களை அவன் மாற்றிக்கொள்ளுதல் அவசியம். அதிகாரப்பூர்வமான மூலத்திட மிருந்து கேட்பதன் மூலம் மட்டுமே அந்த மாற்றம் சாத்தியமாகும். அர்ஜுனன் இங்கே மிகச்சிறந்த உதாரணமாக விளங்குகின்றான்: அவன் இறை விஞ்ஞானத்தை கிருஷ்ணரிடமிருந்து கேட்கின்றான். கேட்டல் என்னும் இந்த வழிமுறையிடம் உயிர்வாழி தன்னை ஒப்படைத்தால், ஜட இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான தனது நீண்ட கால விருப்பத்தினை அவன் இழக்க முடியும். ஆதிக்கம் செலுத்துவதற்கான தனது நீண்ட கால விருப்பத் தினைக் குறைப்பதற்குத் தகுந்தாற் போல, அவன் படிப்படியாக ஆன்மீக ஆனந்தத்தையும் அனுபவிக்கத் தொடங்குவான். பரம புருஷ பகவானின் தொடர்பில் அறிவைப் பெறும்போது, அதற்குத் தகுந்தாற் போல ஒருவன் நித்தியமான ஆனந்தமான வாழ்வை அனுபவிக்கின்றான் என்று ஒரு வேத மந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
( ஶ்ரீமத்பகவத்-கீதை - உண்மையுருவல் / 13.22 / பொருளுரை வழங்கியவர்: ஶ்ரீல பிரபுபாதர் )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
து?
Comments
Post a Comment