அற்பத்தனத்திற்கான விலை




முன்னொரு காலத்தில் உபபர்ஹணா என்றறியப்படும் கந்தர்வன் ஒருவர் இருந்தார். கந்தர்வர்கள் சுவர்க்க லோகத்தில் வாழும் தேவர்களில் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் மிகவும் அழகான தோற்றடயவர்களாகவும், நன்றாகப் பாடும் திறனுடையவர்களுமாகவும் இருந்தனர்.  இவர்கள் வாழும் கிரஹம் கந்தர்வ லோகம் என்றறியப்படுகிறது. உபபர்ஹணா மிகவும் அழகான தோற்றமுடையவராக, அவரது முகம் கவர்ச்சி மிக்கதாகவும், கட்டுமஸ்தான தேக அமைப்பையும் பெற்றிருந்தார். இதனால் பிற கந்தர்வர்களும் கூட இவரை மதித்தனர். இவர் மலர் மாலைகளாலும், சந்தனக் குழம்பினாலும், அழகு சாதனப்பொருட்களினாலும் மற்றும் ஆவரணங்களினாலும் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்வதில் நிபுணராகத் திகழ்ந்தார். அவர் அங்கு வாழ்ந்த பெண்களுக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார்.


ஒரு சமயம் சுவர்க்கலோக வாசிகள் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை போற்றித் துதிக்கும் பொருட்டு ஆன்மீக விழா ஒன்றினை ஏற்பாடு செய்தனர். எல்லா விதத்திலுமுள்ள தேவர்களையும் அதாவது கந்தர்வர்கள் மற்றும் அப்ஸரசுக்களும் அவ்விழாவில் பங்கெடுக்க அழைக்கப்பட்டிருந்தனர். உபபர்ஹணாவும் பல அழகிய பெண்கள் புடை சூழ அவ்விழாவிற்குச் சென்றார். துரதிர்ஷ்ட வசமாக புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் கிருஷ்ணரின் அல்லது பகவான் விஷ்ணுவின் புகழைப் பாடி துதிப்பதற்குப் பதிலாக போதையேறிய உபபர்ஹணா அவ்விழாவிற்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் பெளதிக பாடல்களைப் பாடினார். விழாவிற்கு வருகை தந்த அனைவரும் உபபர்ஹணாவின் இச்செயலால் வருத்தம் அடைந்தனர்.


இதனால் பிரபஞ்சத்தின் செயல்களை மேற்பார்வையிடுபவர்களான பிரஜாபதிகள் உபபஹர்ணாவிற்கு சாபம் கொடுத்தனர். "உன்னுடைய இந்த மோசமான செய்கைக்கு அவசியம் தண்டனை பெற்றே தீர வேண்டும்". எனவே நீ இழிகுலத்தில் அழகற்றவனாக பிறக்கக் கடவாய்!!லென்று சபித்தனர்.  இவ்வாறு சபிக்கப்பட்ட உபபர்ஹணா உயர்ந்த சுவர்க்க லோகத்திலிருந்து பூலோகத்திற்குள் வீழ்ந்தார். கந்தர்வன் என்ற உயர்ந்த பதவியும் பறிக்கப்பட்ட உபபர்ஹணா பூமியில் ஒரு வேலைக்காரியின் மகனாகப் பிறக்க நேரிட்டது. அப்பாது தான் பெருமையாக நினைத்த தனது அழகையெல்லாம் இழந்துவிட்டிருந்தார். 


இவ்விதம் பூமியில் வீழ்ந்த உபபர்ஹணாவிற்கு என்ன நேர்ந்தது? அவர் மீண்டும் அவருடைய உயர்ந்த லோகத்திர்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றாரா? தொடர்ந்து படியுங்கள் . . .



                                                       🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


நம்முடைய நடத்தை பற்றிய ஒரு பாடம்


நம்மிடமுள்ள பணிவு மற்றும் மரியாதையுடன் கூடிய நடத்தையானது உயர்நத ஆத்மாக்களை கவர்வது மட்டுமில்லாமல் அவர்களது ஆசியையும் பெற்றுத் தரும். ஒருவரது நடத்தையானது பொதுவாக  அவர் மற்றவர்களிடம் அணுகும் முறையைப் பொறுத்தது. எனவே நாம் நல்ல மனிதர்களது சகவாசத்தில் இருந்து கொண்டு நல்ல ஒழுக்கத்தையும், நல்ல அணுகுமுறையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.








து?

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more