சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம்போன போக்கில் செயல்படுபவன், பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை.
பொருளுரை: முன்பே விவரிக்கப்பட்டபடி, சாஸ்திரங்களின் விதிகள் மனித சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் நிலைகளுக்கும் கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொருவரும் இந்த சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டு மென்று எதிர்பார்க்கப்படுகின்றனர். இவற்றைப் பின்பற்றாமல் தனது மனம்போன போக்கில் காமம், கோபம், மற்றும் பேராசையின்படி ஒருவன் செயல்பட்டால், அவன் தனது வாழ்வில் என்றுமே பக்குவமடைய முடியாது. வேறு விதமாகக் கூறினால், ஒரு மனிதன் இவ்வெல்லா விஷயங்களையும் கொள்கையளவில் அறிந்தவனாக இருந்தாலும், தனது சொந்த வாழ்வில் இவற்றை ஈடுபடுத்தாத வரை அவன் மனித இனத்தின் கடைநிலையைச் சேர்ந்தவனாகவே அறியப்படுகின்றான். மனித வாழ்வில் உள்ள உயிர்வாழி, வாழ்வை உன்னத தளத்திற்கு உயர்த்துவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றுவான் என்றும், விவேகத்துடன் செயல்படுவான் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றான். ஆனால் அவ்விதிகளைப் பின்பற்றா விடில், அவன் தன்னைத் தாழ்த்திக் கொள்கின்றான். அதே சமயத்தில் அவன் இந்த சட்டதிட்டங்களை பின்பற்றினாலும், இறுதியில் முழுமுதற் கடவுளைப் பற்றிய அறிவின் தளத்தினை அடையாவிடில், அவனது அறிவு அனைத்தும் விரயமாகின்றது. அவ்வாறு அவன் முழுமுதற் கடவுள் இருப்பதை ஏற்றுக் கொண்டாலும், அந்த இறைவனின் தொண்டில் தன்னை ஈடுபடுத்தா விடில், அவனது முயற்சிகள் வீணாகிவிடுகின்றன. எனவே, ஒருவன் தன்னை படிப்படியாக கிருஷ்ண உணர்வு மற்றும் பக்தித் தொண்டின் தளத்திற்கு உயர்த்திக் கொள்ளுதல் அவசியம்; அதன் பின்னரே அவன் பக்குவத்தின் மிகவுயர்ந்த நிலையை அடைய முடியும், இல்லையேல் முடியாது.
காம–காரத: என்னும் சொல் மிகவும் முக்கியமானது. தெரிந்தே விதிகளை மீறுபவன் காமத்தில் செயல்படுகின்றான். இது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அவன் அறிகின்றான், இருந்தும் அவ்வழியில் செயல்படுகின்றான். இதுவே மனம்போன போக்கில் நடப்பது என்று அழைக்கப்படுகின்றது. இதனைச் செய்ய வேண்டும் என்று அவன் அறிவான், இருந்தும் அவன் அதனைச் செய்வதில்லை; எனவே, மனம்போன போக்கில் நடப்பவன் என்று அவன் அழைக்கப்படுகின்றான். இத்தகைய நபர்கள் முழுமுதற் கடவுளால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் மனித வாழ்வின் பக்குவத்தை அடைய முடியாது. மனித வாழ்க்கை, முக்கியமாக ஒருவனது இருப்பைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கானதாகும், சட்டதிட்டங்களைப் பின்பற்றா தவனால் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியாது, சுகத்தின் உண்மையான தளத்தையும் அடைய முடியாது.
ஶ்ரீமத் பகவத்கீதை (உண்மையுருவில்) 16.23 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment