ஹந்த—ஒ; அயம்—இந்த; அத்ரி:—மலை; அபலா:—ஒ, தோழியரே!
ஹரி-தாஸ-வர்யே:—பகவானது தொண்டர்களில் மிகச் சிறந்தது; யத்- ஏனென்றால்; ராம-க்ருஷ்ண-சரண
பகவான் கிருஷ்ணர் மற்றும் பலராமரின் தாமரைத்திருவடிகளின்; ஸ்பரஸ—ஸ்பரிசத்தினால்; ப்ரமோத:—மகிழ்ச்சியடைதல்;
மானம்—மரியாதை; தனோதி—அளிக்கிறது; ஸஹ—உடன்; கோ-கணயோ:—பசுக்கள், கன்றுகள் மற்றும் ஆயர்குலச்
சிறுவர்கள்; தயோ:—அவர்களுக்கு (ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பலராமருக்கு); யத்—ஏனென்றால்;
பாணீய—குடி தண்ணிருடன்; ஸூயவஸ—மிகவும் மென்மையான புற்கள்; கந்தர—குகைகள்; கந்த—மூலை:
கந்த—மூலங்கள் (கிழங்கு வகைகள்).
பக்தர்கள் அனைவரினும் இக் கோவர்த்தனகிரியே மிகச்
சிறந்ததாகும்! ஓ, தோழிப் பெண்களே, இம்மலை கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் அவர் தம் கன்றுகளுக்கும்,
பசுக்களுக்கும் மற்றும் ஆயர்குலச் சிறுவர்களுக்கும் தேவையான அனைத்தையும் அளிக்கின்றது.
பருகுதற்கு நீர், மென்மையான பசும்புற்கள், குகைகள், கனிகள், மலர்கள், மற்றும் காய்கறிகள்
போன்ற பொருள்கள் இவ்வாறு இம்மலை பகவானுக்குத் தனது மரியாதையினை அளிக்கின்றது. கிருஷ்ணர்,
மற்றும் பலராமரின் திருவடித்தாமரைகளின் ஸபரிசம் பட்டதினால் கோவர்தனகிரி மகிழ்ச்சி மிக்கதாக
விளங்குகின்றது.
பொருளுரை
இம்மொழிபெயர்ப்பு ஸ்ரீல பிரபுபாதாவின் “சைதன்ய-சரிதாம்ருதத்திலிருந்து
(மத்ய 18.34) எடுத்தாளப்படுகிறது.
ஸ்ரீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகுர் கோவர்தன
கிரியின் வளத்தினைப் பின்வருமாறு விளக்குகிறார்: “பாணீய” என்னும் சொல் கோவர்தன அருவிகளின்
நறுமணமிக்க குளிர்ந்த நீரினைக் குறிப்பிடுகிறது. கிருஷ்ணரும் பலராமரும் இந்நீரினையேப்
பருகுவதற்கும் கை கால்களை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர். கோவர்தன கிரி
மேலும் பருகுவதற்கரியத் தேன், மாங்கனிச் சாறு, “பீலு” என்னும் மரத்தின் சாறு போன்றவற்றையும்
அளிக்கிறது. “ஸூயவஸ” என்னும் சொல் சமயச் சடங்குகளில் “அர்க்கியம்” செய்வதற்குப் பயன்படுத்தப்படும்
“தூர்வா” புல்லைக் குறிப்பிடுகிறது. கோவர்தனகிரி பசுக்களின் வளர்ச்சிக்கும், பாலின்
பெருக்கத்திற்கும் உதவும் வகையில் மணமிக்க, மென்மையான பசும்புற்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளது.
இவ்வாறு அப்புற்கள் உன்னத பசுக்கூட்டங்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. “சுந்தர” என்னும்
வார்த்தை குகைகளைக் குறிப்பிடுகின்றது. அக்குகைகளில்தான் கிருஷ்ண பலராமரும் அவர்தம்
நண்பர்களும் விளையாடுவர், அமர்ந்திருப்பர் மற்றும் படுத்திருப்பர். வெய்யில் அதிகமானாலும்,
குளிர் அதிகமானாலும், அல்லது மழை பெய்தாலும் அக்குகைகளே இன்பம் அளிப்பவையாகும். கோவர்தனகிரி
மேலும் உண்பதற்கு கந்த மூலங்களையும், அணிவதற்கு மணிகளையும், அமர்வதற்கு சமதளத்தினைனயும்,
மென்மையான கற்களின் வடிவில் வீளக்குகளையும் கண்ணாடிகளையும் மின்னும் தண்ணீரையும் பிற
இயற்கைப் பொருட்களையும் வழங்குகின்றது.
ஶ்ரீமத் பாகவதம் 10.21.18
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment