மொழிபெயர்ப்பு
பகவானின் மாயா சக்தி, தனது தாழ்ந்த நிலையைக் குறித்து வெட்கம் அடைந்திருப்பதால், அவளால் உயர்ந்த ஸ்தானத்தை ஏற்க முடியவில்லை. ஆனால் அவளால் குழப்பத்திற்கு ஆளானவர்கள், “நான்”, “எனது” என்று எண்ணங்களில் ஆழ்ந்திருப்பதால் எப்பொழுதும் அர்த்தமற்ற பேச்சிலேயே ஈடுபட்டுள்ளனர்.
பொருளுரை
முழுமுதற் கடவுளின் வெல்லுதற்கரியதும், சக்தி வாய்ந்ததுமான மாயா சக்தியால் அல்லது அறியாமையைப் பிரதிநிதிக்கும் தாழ்ந்த சக்தியால், உயிரோட்டம் கொண்ட அகில உலகையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட முடியும். இருப்பினும் பரமபுருஷரின் எதிரே நிற்பதற்குரிய போதுமான வலிமை அதற்கு இல்லை. அறியைமை முழுமுதற் கடவுளின் பின்புறத்தில் உள்ளது. அங்கு ஜீவராசிகளைத் தவறான வழியால் திருப்புவதற்குப் போதுமான வலிமையை அது பெற்றிருக்கிறது. அர்த்தமற்ற பேச்சைப் பேசுவதே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளவர்களுக்குரிய முக்கிய அறிகுறியாகும். அர்த்தமற்ற பேச்சுக்கள் வேத இலக்கியங்களால் ஆதரிக்கப்பட வில்லை. மேலும் அர்த்தமற்ற பேச்சுக்கு முதற்படியாக இருப்பது “நான, எனது” என்ற எண்ணமாகும். இறை உணர்வற்ற நாகரீகம் இத்தகைய போலி எண்ணங்களால் ஆளப்படுகிறது. மேலும் உண்மையான இறை உணர்வைப் பெறாத இத்தகைய மனிதர்கள் பொய்யான ஒரு கடவுளை ஏற்றுக் கொள்கின்றனர். அல்லது மாயா சக்தியால் ஏற்களவே குழம்பிப் போயிருக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக, தாங்களே கடவுள் என்று பொய்யாக அறிவிக்கின்றனர். ஆனால் பகவானின் எதிரே இருப்பவர் களும், அவரிடம் சரணடைபவர்களும் மாயா சக்தியால் வசியப்படுத்தப்பட முடியாது: எனவே “நான், எனது” எனும் தப்பான கருத்துக்களிலிருந்து அவர்கள் விடுபட்டவர் களாக இருக்கின்றனர். இதனால் அவர்கள் ஒரு பொய்க் கடவுளை ஏற்பதுமில்லை, தங்களை பரமபுருஷருக்குச் சமமானவர்களாக காட்டிக் கொள்வதுமில்லை. குழப்பத்தில் ஆழ்ந்துள்ளவனின் அடையாளம் இப்பதத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
ஶ்ரீமத் பாகவதம் 2.5.13
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment