கோபியர்களின் கார்த்தியாயினி விரதம்

    


துர்கா தேவி, ஜட மூலகங்களாலான ஜடவுலகத்தினை மேற்பார்வையிடும் தேவதையாவாள். தேவர்கள், பௌதிகச் செயல்களின் துறைகளை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள வெவ்வேறு நிர்வாகிகளே ஆவர், அவர்களும் அந்த ஜட சக்தியின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளனர். ஆனால், கிருஷ்ணருடைய அந்தரங்க சக்திகள் இந்த பெளதிகப் படைப்புடன் தொடர்புகொள்வதில்லை. ஆன்மீக உலகமும் எல்லா ஆன்மீகச் செயல்களும் அந்தரங்கமான ஆன்மீக சக்தியின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளன. அந்தச் செயல்கள் யோகமாயை எனப்படும் ஆன்மீக சக்தியால் நிறைவேற்றப்படுகின்றன. யோகமாயை என்பது பரம புருஷ பகவானின் ஆன்மீக அல்லது அந்தரங்க சக்தியாகும். ஆன்மீக உலகத்திற்கு ஏற்றம் பெற்று பகவானின் தொண்டில் ஈடுபட விரும்புபவர்கள் யோகமாயையின் கட்டுப்பாட்டின் கீழ் ஆன்மீகப் பக்குவத்தினை அடைகின்றனர். பௌதிகத்தில் உயர்வு பெற விருப்பம் கொண்டவர்கள் புலனுகர்ச்சியை அதிகரிப்பதற்கான சமயச் சடங்குகளிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் இறுதியில் பகவானின் அருவ தோற்றத்தினுள் ஐக்கியமாக முயல்கின்றனர். அத்தகு மக்கள் பொதுவாக அருவவாதிகளாக மாறுகின்றனர். அவர்கள் சிவபெருமான் அல்லது துர்கையை வழிபடுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர், ஆனால் அதற்கான விளைவு நூறு சதவிகிதம் பெளதிகமானதாகவே இருக்கும்.


கோபியர்களின் உதாரணத்தைப் பின்பற்றி, பக்தர்கள் சில நேரங்களில் கார்த்தியாயினி  தேவியினை வழிபடுகின்றனர், ஆனால் காத்யாயினி தேவி யோகமாயையின் அவதாரம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். கோபியர்கள் கிருஷ்ணரைத் தங்களது கணவனாக அடையும் பொருட்டு யோகமாயையினை (கார்த்தியாயினி தேவி ) வழிபட்டனர். மற்றொருபுறம், ஸப்த -ஷதீ என்னும் சாஸ்திரத்தில் ஸுரதன் என்ற சத்திரிய மன்னனும் ஸமாதி என்ற வைசிய செல்வந்தனும் பௌதிகப் பக்குவத்தினை அடைவதற்காக துர்கா தேவியின் வடிவில் ஜட இயற்கையை வழிபட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யோகமாயையின் வழிபாட்டினையும் மஹாமாயையின் வழிபாட்டினையும் சமமானதாகக் கருதி அவற்றினை இணைப்பதற்கு முயன்றால், அச்செயல் புத்திசாலித்தனம் ஆகாது. அனைவரும் ஒருவரே என்னும் கருத்தானது மூளையில் குறைவான சரக்கு உள்ளவர்களால் பிரயோகிக்கப்படும் ஒரு வகையான முட்டாள்தனமாகும். யோகமாயையை வழிபடுவதும் மஹாமாயையை வழிபடுவதும் சமம் என்று முட்டாள்களும் அயோக்கியர்களும் கூறுகின்றனர். அதுபோன்ற எண்ணங்கள் மன அனுமானத்தின் விளைவாகத் தோன்றுகின்றன. அதனால் நடைமுறையில் எந்த நன்மையும் இல்லை .


(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / மத்திய லீலை 8.90  பொருளுரை)



இதற்கு உதாரணம் அமைப்பதற்காக, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தாமே தனிப்பட்ட முறையில் பல்வேறு புனித ஸ்தலங்களுக்குப் பயணம் செய்தார். எங்கெல்லாம் சென்றாரோ, அங்கே அவர் உடனடியாக பரம் புருஷ பகவானின் மீதான பரவச அன்பினை வெளிப்படுத்தினார். ஒரு வைஷ்ணவன் தேவர்களுடைய கோயிலுக்குச் செல்லும்போது, அந்த தேவரின் மீதான அவனது பார்வையானது அருவவாதிகள் அல்லது மாயாவாதிகளின் பார்வையிலிருந்து வேறுபட்டதாகும். பிரம்ம சம்ஹிதை இதனை ஆதரிக்கின்றது. உதாரணமாக, ஒரு வைஷ்ணவன் சிவபெருமானின் ஆலயத்திற்குச் செல்லுதல் என்பது அபக்தர்கள் அங்கே செல்வதிலிருந்து வேறுபட்டதாகும். அபக்தன் சிவலிங்கத்தினை கற்பனையானதென்று கருதுகிறான்; ஏனெனில், பரம்பொருள் இறுதியில் சூன்யமானது என்பதே அவனது அபிப்பிராயம். ஆயினும், ஒரு வைஷ்ணவன் சிவபெருமானை ஒரே நேரத்தில் முழுமுதற் கடவுளுடன் ஒன்றுபட்டவராகவும் வேறுபட்டவராகவும் காண்கிறான். இது தொடர்பாக, பால் மற்றும் தயிரின் உதாரணம் வழங்கப்படுகிறது. தயிரானது உண்மையில் பாலைத் தவிர வேறல்ல. ஆனால் அதே சமயத்தில் அது பால் அன்று. அஃது ஒரே சமயத்தில் பாலுடன் ஒன்றுபட்டும் அதிலிருந்து வேறுபட்டும் உள்ளது. இதுவே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தத்துவமாகும். இது பகவான் கிருஷ்ணரால் பகவத் கீதையில் (9.4) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது:


மயா ததம் இதம் ஸர்வம் ஜகத், அவ்யக்த-மூர்தினா 

மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி ந சாஹம் தேஷ்வவஸ்தித:


"நான் எனது தோன்றாத உருவின் மூலம் அகிலம் முழுவதும் பரவியுள்ளேன். எல்லா ஜீவன்களும் என்னில் இருக்கின்றனர்; ஆனால் அவர்களில் நான் இல்லை."


பரம உண்மையான கடவுள் எல்லாமாக உள்ளார், ஆனால் அதே சமயத்தில் எல்லாம் கடவுள் என்பது பொருளல்ல. இந்த காரணத்திற்காகவே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் அவரைப் பின்பற்றுபவர்களும் தேவர்களின் கோயில்களுக்குக்கூட செல்கின்றனர், ஆனால் அவர்கள் அந்த தேவர்களை ஓர் அருவவாதி அவர்களைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பதில்லை. ஒவ்வொருவரும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி எல்லாக் கோயில்களுக்கும் செல்ல வேண்டும். சில நேரங்களில், கோபியர்கள் காத்யாயனி கோயிலுக்குச் சென்றதை சாதாரண மக்கள் தேவியின் கோயிலுக்குச் செல்வதைப் போன்றதே என்று பௌதிக ஸஹஜியாக்கள் நினைக்கின்றனர். ஆனால், கோபியர்கள் காத்யாயனியிடம் கிருஷ்ணரைத் தங்களது கணவனாக வழங்கும்படி பிரார்த்தித்தனர். பெளதிகவாதிகளோ சில பெளதிக நன்மைகளைப் பெறுவதற்காக காத்யாயனி கோயிலுக்குச் செல்கின்றனர். இதுவே வைஷ்ணவன் செல்வதற்கும் அபக்தன் செல்வதற்கும் இடையிலான வேறுபாடாகும்


(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / மத்திய லீலை 9.360 / பொருளுரை)


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more