ஒரு ஜீவராசியால் ஆசைகளே இல்லாமல் இருக்கமுடியாது. அவன் உயிரற்ற ஒரு கல்லல்ல. அவன் நிச்சயமாக செயலாற்றிக் கொண்டும், சிந்தித்துக் கொண்டும், உணர்ந்து கொண்டும், விருப்பப்பட்டுக் கொண்டும் தான் இருக்கிறான். ஆனால் அவனது சிந்தனையும், உணர்வும், விருப்பமும் பௌதிகமானவையாக இருக்கும்போது அவன் பந்தத்தில் சிக்கிக் கொள்கிறான். மாறாக அவனது உணர்வும், சிந்தனையும், விருப்பமும் பகவானின் தொண்டைப் பற்றியதாக இருக்கும்பொழுது, அது அவனை படிப்படியாக எல்லா பந்தத்திலிருந்தும் விடுவிக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஒருவர் பகவானின் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடுகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அவர் அதற்கான ஆவலைப் பெறுகிறார். அதுவே பக்தித் தொண்டிற்குரிய தெய்வீக தன்மையாகும். பௌதிக சேவை திகட்டிவிடும். ஆனால் பகவானின் ஆன்மீகத் தொண்டு திகட்டாது என்பதுடன் அதற்கு ஒரு முடிவுமில்லை. பகவானின் தீவிரமான தொண்டினால், அவரது தெய்வீகமான இருப்பை ஒருவரால் உணர முடியும். ஆகவே பகவானது தொண்டும், பகவானும் எல்லாவிதத்திலும் ஒன்றே என்பதால், அவரைக் காண்பதென்பது அவரது தொண்டில் ஈடுபட்டிருப்பதைக் குறிப்பதாகும், உண்மையான பக்தன் பகவானுக்கு உண்மையான தொண்டைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அத்தொண்டை எங்கு, எப்படி செய்ய வேண்டும் என்ற வழியை பகவான் காட்டுவார்.
ஶ்ரீமத் பாகவதம் 1.6.21 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment