ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது சிக்ஷாஷ்டகத்தில் பிரார்த்தனை செய்கிறார்:
யுகா யிதம் நிமேஷேண சக்ஷுஷா ப்ராவ்ருஷாயிதம்
ஷூன்யாயிதம் ஐகத் ஸர்வம் கோவிந்த -விரஹேண மே
'கோவிந்தரே! உம்முடைய பிரிவு ஒரு கணம் என்றாலும் அதனை நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உணர்கின்றேன்.கண்களில் கண்ணீர் பெருகி மழைபோல பொழிகிறது, தாங்களின்றி இந்த உலகையே நான் சூன்யமாகக் கருதுகின்றேன்." தனது கண்களில் கண்ணீர் நிரம்பி, குரல் தழுதழுத்து,இதயத்துடிப்பு அதிகமான நிலையில் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிக்க வேண்டும் என்பது ஒரு பக்தனின் ஏக்கமாகும். பகவானின் திருநாமத்தை உச்சரிப்பதில் இவை நல்ல அறிகுறிகளாகும். பரவசத்தின் காரணத்தினால், கோவிந்தர் இல்லாத முழுவுலகையும் வெற்றிடமானதாக ஒருவன் கருத வேண்டும். இதுவே கோவிந்தருடைய பிரிவின் அறிகுறியாகும். ஜடவுலகில் நாம் அனைவரும் கோவிந்தரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளோம், பௌதிகப் புலனுகர்ச்சியில் மூழ்கியுள்ளோம். எனவே, ஒருவன் ஆன்மீகத் தளத்தில் அறிவொளி பெறும்போது, அவன் கோவிந்தரைச் சந்திப்பதற்குப் பேராவல்கொள்கிறான், கோவிந்தரின்றி முழுவுலகமும் வெற்றிடமாவதை உணர்கிறான்.
(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதி லீலை 7.81 / பொருளுரை)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment