நேஹ யத்கர்ம தர்மாய ந விராகாய கல்பதே
ந தீர்த்தபதஸேவாயை ஜீவந்நபி ம்ருதோ ஹி ஸ:
மொழிபெயர்ப்பு
யாருடைய பணி மத வாழ்வுக்கு அவனை உயர்த்தவில்லையோ, யாருடைய மதச் சடங்குகள் அவனைத் துறவுக்கு உயர்த்தவில்லையோ, துறவில் உள்ளவனை எது பரம புருஷ பகவானின் பக்தித் தொண்டுக்கு அழைத்துச் செல்லவில்லையோ, அவன் சுவாசித்துக் கொண்டிருந்தாலும் இறந்தவனாகக் கருதப்பட வேண்டும்.
பொருளுரை
தேவஹூதியின் கூற்று என்னவென்றால், அவள் புலன் நுகர்ச்சிக்காக அவள் கணவருடன் வாழ்வதற்கு பற்றுடையவளாக இருந்தாலும், அது உலகப் பிடிப்பிலிருந்து விடுதலைக்கு அழைத்துச் செல்லாவிட்டால், அவள் வாழ்வு வீணானதாகும். ஒருவர் செய்யும் வேலை அவரை மத வாழ்வு நிலைக்கு அழைத்து செல்லாவிட்டால், அது பயனற்ற செயல் ஆகும். எல்லாரும் இயற்கையால் ஏதாவது வேலை செய்ய விருப்பம் கொள்வர், அந்த வேலை ஒருவரை மத வாழ்வுக்கு அழைத்துச் சென்றால், அந்த மத வாழ்வு ஒருவரைத் துறவு நிலைக்கு அழைத்துச் சென்றால், அந்த துறவு நிலை ஒருவரை பக்தித் தொண்டிற்கு அழைத்துச் சென்றால், ஒருவர் அந்த வேலையின் நிறைவை அடைகிறார். பகவத் கீதையில் குறிப்பிட்டிருப்பதுபோல, எந்த வேலை ஒருவரை பக்தித் தொண்டின் நிலைக்கு இறுதியாக அழைத்துச் செல்லவில்லையோ அது உலகின் பற்றுக்குக் காரணமாகிறது. யக்ஞார்த்தாத் கர்மனோ ந்யத்ர லோகோ யம் கர்மபந்தன: அவருடைய இயற்கையான செயலில் தொடக்கத்திலிருந்து ஒருவர் படிப்டியாக பக்தித் தொண்டின் நிலைக்கு உயர்த்தப்பட்டாலன்றி, அவர் இறந்தவராகக் கருதப்பட வேண்டும். எந்தப் பணி கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள ஒருவரை அழைத்துச் செல்லவில்லையோ, அது பயனற்றதாகக் கருதப்படும்.
ஶ்ரீமத் பாகவதம் 3.23.56
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment