பகவத்கீதைக் கூறுகிறது: ஆன்மீக வளர்ச்சியடைய விரும்பும் ஒருவன் முதலில் அச்சத்தை விட வேண்டும். “அபயம் ஸத்த்வ ஸம்ஸீத்தி:” (ப.கீ.16.1) பௌதீக ஈடுபாட்டினாலேயே அச்சம் உண்டாகிறது. இதனை ஸ்ரீமத் பாகவதமும் (11.2.37) குறிப்பிடுகின்றது: “பயம்த்விதீயாபினி வேஸத: ஸ்யாத்:” உடலியற் கருத்துடைய வாழ்க்கையே அச்சத்தினை உருவாக்குகின்றது. ஒருவன் தன்னை இழந்த ஜடவுடல் என்று நினைக்கும்வரை அவனுக்கு அச்சம் என்பது இருக்கும், இச் ஜடக்கருத்தினின்று ஒருவன் வெளிவரும் பொழுது அவன் பிரம்மபூத அல்லது தன்னுணர்வு பெற்றவனாகிறான் உடனடியாக அவன் அச்சமற்றவனாகிறான். ப்ரஹ்ம பூத: ப்ரஸன்னாத்மா (ப.கீ.18.54) அச்சமுடையோன் ஆனந்தம் அடைவதில்லை. பக்தர்கள் அச்சமில்லாதவர்கள். அவர்கள் எப்பொழுதும் ஆனந்த முடையோராயிருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் பகவானின் தாமரைத் திருவடிகளிடத்துத் தொடர்ந்து பக்தித் தொண்டில் ஈடுபடுவதே காரணமாகும். இது மேலும் கூறப்படுகிறது:
ஏவம் ப்ரஸன்ன - மனஸோ
பகவத் - பக்தி - யோகத:
பகவத் - தத்த்வ - விஞ்ஞானம்
முக்த - ஸங்கஸ்ய ஜாயதே (பாக.1.2.20)
பகவத் பக்தி யோகத்தினைப் பயிற்சி செய்வதின் மூலம் ஒருவன் அச்சமற்றவனாகவும் ஆனந்தமுடையவனாகவும் ஆகிறான். அவ்வாறு அவன் அச்சமற்றவனாகவும் ஆனந்தமுடையவனாகவும் ஆகவில்லையென்றால் அவனால் கடவுள் விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ள முடியாது. பகவத் தத்த்வ விஞ்ஞானம் முக்த ஸங்கஸ்ய ஜாயதே. இச்சுலோகம் இப்பௌதீக உலகின் அச்சத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றவர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அவ்வாறு விடுதலை பெற்ற நிலையில் ஒருவன் பகவானின் உன்னதமான வடிவினை உண்மையில் உணர்ந்து
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment