கிருஷ்ண உணர்விலுள்ள பக்தர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு மந்திரத்தை சொல்லிப் பயிற்சி செய்வது அவசியமாகும். மகா - மந்திரமான ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஒருவர் நிச்சயமாக ஜபிக்க வேண்டும். மேலும் சிந்தாமணி - ப்ரகர - ஸத்மஸு எனும் மந்திரத்தையோ அல்லது (இதோ ந்ருஸிம்ஹ: பரதோ நருஸிம்ஹோ யதோ யதோ யாமி ததோ ந்ருஸிம்ஹ:) என்ற நரசிம்ஹ ஸ்தோத்திரத்தையோ ஒருவர் பாடிப் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்தரும் ஏதேனும் ஒரு மந்திரத்தை பக்குவமான முறையில் பாடிப் பயிலவேண்டும். இதனால், இப்பிறவியில் அவர் ஒரு மிருகமாகப் பிறக்க நேர்ந்தாலும் கிருஷ்ண உணர்வை அவர் மறந்துவிடமாட்டார். இப்பிறவியிலேயே ஒருவர் தனது கிருஷ்ண உணர்வை பக்குவப் படுத்த முயல வேண்டும். ஏனெனில், கிருஷ்ணரையும் தன் உபதேசங்களையும் புரிந்து கொள்வதாலேயே, இவ்வுடலை உகுத்தபின் ஒருவரால் பரமபதத்தைச் சென்றடைய முடியும். ஒருவர் விழ நேர்ந்தாலும், கிருஷ்ண உணர்வுப் பயிற்சி ஒருபோதும் வீணாவதில்லை. உதாரணமாக, அஜாமிளன் தனது சிறு பிராயத்தில், தன் தந்தையின் உபதேசத்தின்படி, நாராயண எனும் நாமத்தை உச்சரிக்கும் பயிற்சியை மேற் கொண்டான். ஆனால் பிறகு, அவன் தன் வாலிபப் பருவத்தில் ஒரு குடிகாரனாகவும், பெண் பித்துப் பிடித்தவனாகவும், மோசக்காரனாகவும், திருடனாகவும் மாறினான். ஆயினும் தான் நாராயணா எனப் பெயரிட்ட தன் மகனை அழைப்பதற்காக, அவன் நாராயணா எனும் நாமத்தை உச்சரித்தான். இதனால் பாவச் செயல்களில் சம்பந்தப்பட்டவனாக இருந்தும், அவன் முன்னேற்றம் அடைந்தவனானான். ஆகவே, எத்தகைய சூழ்நிலையாக இருப்பினும், ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்தை நாம் மறந்து விடக்கூடாது. கஜேந்திரனின் வாழ்வில் நாம் கண்டதைப் போல், மிகப்பெரிய ஆபத்தில் அது நமக்கு உதவியாக இருக்கும்.
ஶ்ரீமத் பாகவதம் 8.3.1 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment