அனைத்தும் பகவானாகவே இருப்பதால், அவரை வழிபடுகதில் பயனில்லை என்று அருவவாதிகள் வாதிக்கின்றனர். ஆனால் பகவானின் தேக உறுப்புக்களிலிருந்து பிறந்துள்ள பகுதிப் பொருட்களை உபயோகித்து, நன்றி உணர்வுடன் உருவவாதிகள் பகவானை வழிபடுகின்றனர். பழங்களும், பூக்களும் பூமித்தாயின் தேகத்திலிருந்து கிடைக்கின்றன. இருப்பினும் அறிவுள்ள பக்தன் பூமியிலிருந்து பிறந்த பொருட்களாலேயே பூமித்தாயை வழிபடுகிறான். இதைப் போலவே, கங்கைத் தாய் கங்கை நீராலேயே வழிபாடு செய்யப்படுகிறாள். இருப்பினும் அத்தகைய வழிபாட்டின் பலனை, வழிபடுபவன் அனுபவிக்கிறான். பகவானின் உடலுறுப்புக்களிலிருந்து பிறந்த பொருட்களாலேயே அவரது வழிபாடும் நடத்தப்படுகிறது. இருப்பினும் பகவானின் ஒரு பாகமாக உள்ள வழிபாடு செய்பவன், பகவானிடம் செய்யும் பக்தித் தொண்டின் பலனை அடைகிறான். நானே பகவான் என்று அருவவாதி தப்பாக முடிவு செய்யும் வேளையில், உருவவாதி, பகவானிலிருந்து எதுவுமே வேறானதல்ல என்பதைப் பூரணமாக உணர்ந்து, பக்தித் தொண்டால் பகவானை வழிபடுகிறான். எனவே எதுவுமே தனக்குச் சொந்தமானதன்று என்பதை அறிந்திருப்பதால் பக்தன் அனைத்தையும் பகவானுடைய தொண்டில் ஈடுபடுத்த விரும்புகிறான். ஒத்த தன்மையைப் பற்றிய இப்பக்குவமான கருத்து, பகவானின் அன்புத் தொண்டில் பக்தன் ஈடுபடுவதற்கு உதவுகிறது. அப்படியிருக்க அருவவாதி ஒருவன், பொய்யான பெருமிதம் கொண்டிருப்பதால், பகவானால் ஏற்றுக் கொள்ளப்படாமல், என்றென்றும் நாத்திகனாகவே எஞ்சியிருக்கிறான்.
ஶ்ரீமத் பாகவதம் 2.6.23 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment