“வைஷ்ணவானாம் யதா ஸம்பு”: அதாவது எல்லாப் பக்தர்களிலும் சிறந்தவர் சிவபெருமானே என்று சொல்லப்படுகின்றது. ஆகையினால் பகவான் கிருஷ்ணரின் பக்தர்கள் அனைவரும் சிவபெருமானின் பக்தர்களும் ஆவர். பிருந்தாவனத்தில் கோபீஸ்வரன் கோயில் எனப்படும் சிவபெருமான் ஆலயம் இருக்கின்றது. கோபியர்கள் சிவபெருமானை மட்டுமல்லாது காத்யாயனி என்னும் துர்கையையும் வழிபடுகின்றனர். ஆனாலும் அவர்களது நோக்கம் பகவான் கிருஷ்ணரின் கருணையைப் பெற வேண்டும் என்பதாகவே இருக்கின்றது. பகவான் கிருஷ்ணரின் பக்தன் சிவபெருமானை நிந்திப்பதில்லை மாறாக அவனும் சிவபெருமானை, சிறந்த பக்தர் என்று வணங்குகிறான். ஆகையினால் சிவபெருமானை வணங்கும் பக்தன், கிருஷ்ணரின் அருளைப் பெறவேண்டும் என்றே அவரை வணங்குகின்றானே ஒழிய வேறு எந்தவித பொருள் இன்பத்திற்காகவும் அல்ல. இது பகவத்கீதையிலும் (7.20) பொருட் செல்வம் வேண்டியே மக்கள் பொதுவாக பிறதேவர்களை வழிபடுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. “கானமஸ்தைஸ் தைர் ஹ்ருத ஜ்ஞானா:” பொருளாசையே ஒருவனைத் தேவர்களை வணங்கத் தூண்டுகிறது. ஆனால் ஒரு பக்தன் அவ்வாறு வணங்குவதில்லை. காரணம் அவனிடம் பௌதீக இச்சை இல்லை. இதுதான் சிவபெருமானை வழிபடும் ஒரு பக்தனுக்கும் அசுரனுக்கும் உள்ள வேறுபாடாகும். சிவபெருமானிடம் இருந்து வரத்தினைப் பெற்று அதனைத் தவறான முறையில் பயன்படுத்தும் ஒரு அசுரன் முடிவில் முழுமுதற் கடவுளால் கொல்லப்பட்டு விடுதலை பெறுகிறான்.
ஏனென்றால் சிவபெருமான் முழுமுதற் கடவுளின் சிறந்த பக்தர் என்பதோடு பகவானின் பக்தர்களை நேசிப்பவரும் ஆவார். இதனைச் சிவபெருமானே பிரசேதர்களிடம், அவர்கள் பகவானின் பக்தர்களாக இருக்கின்ற காரணத்தினாலேயே தான் அவர்களை விரும்புவதாகக் கூறுகின்றார். சிவபெருமான் பிரசேதர்களிடம் மட்டும் அன்பும் கருணையும் கொண்டவர் என்றில்லை, அவர் முழுமுதற் கடவுளின் பக்தர்கள் அனைவரிடமும் அன்புடையவர் ஆவார். அப்பக்தர்கள் மீது சிவபெருமான் அன்புமட்டுமல்ல, முழுமுதற் கடவுள் மீதும் வைத்திருக்கின்றார். இதனால் பகவானின் பக்தர்கள் சிவபெருமானை அவர் பகவான் கிருஷ்ணரின் சிறந்த பக்தர் என்று வணங்குகின்றனர். அவர்கள் அவரை தனித்த முழுமுதற் கடவுள் என்று வணங்குவதில்லை. நாம அபராதப் பட்டியலில் ஹரி நாமத்தோடு ஹரநாமத்தையும் சேர்த்து ஓத நினைப்பது குற்றமாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பக்தர்கள் எப்போதும் விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்றும் சிவபெருமான் அவர் பக்தர் என்றும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். முழுமுதற் கடவுளுக்குரிய மரியாதை அல்லது அதற்கும் மேலான மரியாதையினை ஒரு பக்தனுக்கு அளித்தல் வேண்டும். முழுமுதற் கடவுளான பகவான் இராமச்சந்திர மூர்த்தியே சிவபெருமானை சில வேளைகளில் வணங்கியிருக்கிறார். பகவானாலேயே ஒரு பக்தர் வணங்கப்படும் பொழுது, பிறபக்தர்கள் அவரைப் பகவானது நிலையில் வைத்து ஏன் வணங்கக் கூடாது? இதுதான் முடிவாகும். சிவபெருமான் அசுரர்களுக்கு தனது அருளை ஒரு சம்பிரதாயத்திற்காகவே வழங்குகிறார் என்பது இச்சுலோகத்திலிருந்து தெரிய வருகிறது. முழுமுதற் கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவனையே அவர் உண்மையில் விரும்புகிறார்.
ஶ்ரீமத் பாகவதம் 4.24.30 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment