அரசாங்கத்தில் ஒரு சிறைக் கூடத்தை உண்டாக்கியதற்காக மன்னரை ஒருவன் குறை கூறக் கூடாது. அதைப் போலவே, துன்பகரமான இவ்வுலகைப் படைத்ததற்காக பரமபுருஷரை ஓருவன் கண்டனம் செய்யக் கூடாது. சிறைக் கூடம் தேவையான ஒரு ஸ்தாபனமாகும். இது அரசாங்கத்தின் சட்டங்களை மீறுபவர் களுக்காக உள்ளது. அதைப் போலவே, துன்பங்கள் நிறைந்த இந்த ஜட உலகம் பகவானால் படைக்கப்பட்ட தற்காலிகமான ஒரு ஏற்பாடாகும். இது, பகவானை மறந்து, பொய்யான இத்தோற்றத்தை அடக்கியாள முயல்பவர்களுக்கென உள்ளதாகும். ஆனால் பகவான், வீழ்ந்த ஆத்மாக்களைத் தமது இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்ல மிகவும் ஆவலுடன் இருக்கிறார். இக்காரணத்திற்காக அவர் அதிகாரப் பூர்வமான சாஸ்திரங்கள், அவரது பிரதிநிதிகள், மற்றும் சொந்த அவதாரங்கள் ஆகியவற்றின் மூலமாக பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு பல சந்தர்ப்பங்களை அளித்துள்ளார். அவருக்கு இந்த ஜட உலகில் நேரடியான பற்று இல்லையாகையால், அதன் சிருஷ்டிக்காக அவரை நிந்திக்கக் கூடாது.
ஶ்ரீமத் பாகவதம் 2.7.50 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment