பந்தப்பட்ட வாழ்வில் இருப்பதென்பது கடல் நடுவே ஒரு படகை ஓட்டுவதற்கு ஒப்பாகும். சூழ்நிலை நன்றாக இருந்தால், படகு மிகச் சுலபமாக ஓடும். ஆனால் அங்கு புயல் காற்றோ, மூடுபனியோ, வீசும் காற்றோ அல்லது மேகமோ இருக்கு மானால், கடலில் மூழ்கிவிடுவதற்கும் வாய்ப்புண்டு. எவ்வளவு நன்றாக ஆயத்தபபடுத்தப்பட்டு இருந்தாலும், கடலில் திடீர் மாற்றத்தை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாது. கப்பலால் கடல்களைக் கடந்துள்ளவனுக்கு, கடலின் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டி உள்ளது. ஆனால் பகவானின் கருணையால் ஜட வாழ்வெனும் கடலை ஒருவனால் மிகவும் சுலபமாகச் கடந்து விட முடியும். புயல் காற்றுக்கோ அல்லது மூடுபனிக்கோ அவன் அஞ்ச வேண்டியதில்லை. இதல்லாம் பகவானின் விருப்பத்தைப் பொறுத்ததாகும்; பந்தப்பட்ட வாழ்வில் சில துரதிர்ஷடமான ஆபத்து விளையுமானால் ஒருவராலும் உதவி செய்ய முடியாது. ஆனால் பகவத் பக்தர்கள், கவலைப்படாமல் ஜட இருப்பெனும் கடலைக் கடந்து விடுகின்றனர், ஏனெனில் தூய பக்தரொருவர் எப்பொழுதுமே பகவானால் பாதுகாக்கப்படுகிறார் (பகவத் கீதை 9.13). பௌதிகமான. பந்தப்பட்ட வாழ்விலுள்ள தமது பக்தனுடைய செயல்களின் மீது பகவான் விசேஷமான கவனத்தைச் செலுத்துகிறார் (பகவத்கீதை 9.25) எனவே பகவானின் தாமரைப் பாதங்களில் அனைவரும் தஞ்சமடைந்து, எல்லா வழிகளிலும் பகவானின் தூய பக்தனாக இருக்க வேண்டும்.
ஶ்ரீமத் பாகவதம் 2.8.21 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment