பணத்தைத் திரட்டுவதன் மூலமாக, ஜட உலகில் ஒருவன் திமிர் பிடித்தவனாகாமல், தனது வாழ்க்கைத் தேவையை சுலபமாகவும், நேர்வையுடனும் சம்பாதிக்க வேண்டும். பொய் புரட்டுகளின் மூலமாய் சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாவதை விட, நேர்மையான வாழ்க்கைத் தேவைக்காக ஒரு கூலியாக இருப்பது சிறந்தது. நேர்மையான உழைப்பால் உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தனாக ஆவதில் குற்றமில்லை. ஆனால் செல்வம் திரட்டுவதற்காக, வாழ்க்கைக்குரிய நேர்மையான வழியை ஒருவன்தியாகம் செய்து விடக் கூடாது. இத்தகைய முயற்சி பக்தித் தொண்டிற்கு தீங்கிழைப்பதாகும்.
Comments
Post a Comment