சிவபெருமான் ஆடம்பரமான ஆடைகள், ஆபரணங்கள், மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் இறுதியில் நாய்கள் தின்னப் போகும் இந்த உடலை அலங்கரிப்தில் மோகங்கொண்டவர்கள் அதைத் தானானக் கருதி மிகவும் ஆடம்பரமாக போற்றிப்பாதுகாக்கின்றனர். இம்மனிதர்கள் சிவபெருமானைப் புரிந்து கொள்வதில்லை. மாறாக ஆடம்பரமான செல்வ வளத்திற்காக அவர்கள் அவரை அணுகுகின்றனர். இரண்டு வகையான பக்தர்கள் சிவபெருமானுக்கு உண்டு. ஒரு பிரிவினர் முழு லோகாயத வாதிகள் அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட வளங்களை சிவபெருமானிடம் வேண்டுகின்றனர். மற்றொரு பிரிவினர் அவரோடு ஒன்றாக இணைய வேண்டுமென்று விருமபுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் மாயாவாதிகள் ஆவர். அவர்கள் “ஸிவோ (அ)ஹம்” “நான் சிவபெருமான்” அல்லது “முக்தி பெற்ற பிறகு நான் சிவபெருமானுடன் இணைவேன்” என்று ஓதுகின்றனர். மாறாக கர்மாக்ளும், ஞானிகளும் பொதுவாக சிவபெருமானின் பக்தர்களேயாவர். ஆயினும் அவர்கள் அவரது உண்மை நோக்கத்தினை அறிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் சிவபெருமானின் பக்தர்கள் அவரைப் போல் தம்மைக் கற்பித்துக் கொண்டு விஷமுடைய போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஒரு முறை சிவபெருமான் பாற்கடலில் இருநூது வந்த நஞ்சை உண்டதினால் அவர் கண்டம் நீல நிறமாக மாறிற்று. சிவபெருமானின் பாவனை உட்கொண்டு அதனால் அழிகின்றனர். சிவபெருமானின் உண்மையான நோக்கம் ஆத்மாவின் ஆத்மாவான பகவான் கிருஷ்ணருக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதே. அவர் ஆடம்பரமான ஆடைகள், ஆபரணங்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றைப் பகவான் கிருஷ்ணருக்கு அளிக்க வேண்டுமென்றே விரும்புகிறார். காரணம் கிருணூரே உண்மையான அனுபவிப்பவர் ஆவார். சிவபிரான் இவ்வாடம்பரப் பொருட்களை மறுதலிக்கிறார் ஏனென்றால் அவை கிருஷ்ணருக்கு உரியவையாகும். சிவபெருமானின் இந்நோக்கத்தினை அறியாதவர்களாகிய மூட மனிதர்கள் அவரைப் பரிகசிக்கின்றனர் அல்லது எந்தவித நன்மையுமின்றி அவரைப் போல பாவனை செய்ய முயற்சிக்கின்றனர்.
ஶ்ரீமத் பாகவதம் 3.14.28 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment