பாகவதம், சுமார் அரை டஜன் சுலோகங்களில், சுருக்கமாக, முழுமுதற் கடவுளால் பேசப்பட்டதும், பகவானின் சக்தி வாய்ந்த பிரதி நிதித்துவமுமாகும். அவர் பரிபூரணமானவர். ஆதலால், பகவத் விஞ்ஞானமாகிய ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து அவர் வேறுபட்டவரல்ல. இவ்விஞ்ஞானத்தை பிரம்மதேவர் பகவானிடமிருந்து நேரடியாகப் பெற்றார். பின் நாரதரிடம் இதை அவர் ஒப்படைத்தார். நாரதரும் அதை ஸ்ரீல வியாசதேவரிடம் ஒப்படைத்து அதை விரிவுபடுத்திக் கூறுமாறு கட்டளையிட்டார். எனவே பரமபுருஷரைப் பற்றிய உன்னத அறிவு, பௌதிக கல்விமான்களால் ஏற்படுத்தப்பட்ட மனக் கற்பனையல்ல. இது ஜடக் குணங்களின் வரம்புக்கு அப்பாற்பட்டதும், பரிசுத்தமானதும் நித்தியமானதுமான பூரண அறிவாகும். எனவே பாகவத-புராணம் உன்னதமான ஓசை வடிவிலுள்ள பகவானின் நேரடியான அவதாரமாகும். இந்த உன்னதமான அறிவை ஒருவன் சீடப் பரம்பரையில் வரும் பகவானின் உண்மையான பிரதிநிதியிடமிருந்து பெற வேண்டும். இச் சீடப் பரம்பரை பகவானிடமிருந்து பிரம்ம தேவருக்கும், பிரம்மதேவரிடமிருந்து நாரதருக்கும், நாரதரிடமிருந்து வியாசருக்கும், வியாசதேவரிடமிருந்து சுகதேவ கோஸ்வாமிருக்கும் சுக தேவ கோஸ்வாமிக்குமாக சூத கோஸ்வாமிக்குமாக கீழிறங்கி வருவதாகும். வேதமெனப்படும் மரத்தின் பழுத்த பழம், உயர்ந்ததொரு கிளையிலிருந்து திடீரென்று பூமியில் விழுந்து உடைந்து விடாதபடி, ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றப்பட்டு வருகிறது. எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், பகவத் விஞ்ஞானத்தை ஒருவன் சீடப் பரம்பரையின் உண்மையான பிரதிநிதிடமிருந்து செவியுற வேண்டும். இல்லையெனில் பகவத் விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்வது கடினம். ஜீவனோபாயத்திற்காக பாகவதம் கூறுபவர்கள், சபையோரின் புலன்களைத் திருப்திபடுத்துவதான் மூலம் வாழ்க்கைக்குரிய பொருளைச் சம்பாதிக்கின்றனர். இவர்களிடமிருந்து பாகவதத்தை ஒருபொழுதும் கேட்கவே கூடாது.
ஶ்ரீமத் பாகவதம் 2.7.51 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment