பகவானைப் பற்றிய உன்னத அறிவை பகவான் தாமாக அறிவிக்கவில்லை என்றால் அதைத் தெரிந்து கொள்ள முடியாது என்பதே இதன் பொருள். மிகப் பெரிய பௌதிக சிந்தனையாளர்களின் மனக்கற்பனையால் பரமபுருஷரை அறிய முடியாது. அவர்களால் அருவ பிரம்ம உணர்வு வரை செல்லவியலும். ஆனால் உண்மையில் உன்னதத்தைப் பற்றிய பூரண அறிவு. அருவ பிரம்மத்தின் அறிவிற்கு அப்பாற்பட்டதாகும். ஆகவே இது பரம இரகசியமான ஞானம் என்றழைக்கப்படுகிறது. முக்தியடைந்த ஆத்மாக்கள் பலரில், யாதேனும் ஒருவர் முழுமுதற் கடவுளை அறியும் தகுதி பெற்றிருக்கக்கூடும். பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களில் யாரேனும் ஓருவன் மனித வாழ்வின் பூரணத்துவத்தை அடைய முயலக்கூடும் பல முக்தியடைந்த ஆத்மாக்களில் யாதேனும் ஒருவன் மட்டுமே பகவானை உள்ளபடி அறிகிறான் என்று பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது. எனவே பக்தித் தொண்டால் மட்டுமே பரமபுருஷரைப் பற்றிய அறிவை அடைய முடியும். ரஹஸ்யம் என்றால் பக்தித் தொண்டு என்பதாகும். அர்ஜுனன் ஒரு பக்தரும் நண்பருமாக இருந்ததால் அவருக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசித்தார். அத்தகைய தகுதிகளைப் பெறாமல், பகவத் கீதையின் பரம இரகசியத்தினுள் ஒருவரால் நுழைய முடியாது. எனவே, ஒருவன் பக்தனாகி பக்தித் தொண்டை நிறைவேற்றினால் அல்லாது அவனால் முழுமுதற் கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது. இந்த மறைபொருள் கிருஷ்ணப் பிரேமையாகும். அதில் தான் முழுமுதற் கடவுளைப் பற்றிய பரம இரகசியத்தை அறிவதற் குரிய முக்கிய தகுதி இருக்கிறது. உன்னதமான கிருஷ்ணப் பிரேமை எனும் நிலையை அடைய, பக்தித் தொண்டின் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும். இக்கட்டுப்பாட்டு விதிகள் விதி-பக்தி, (பகவானின் பக்தித்தொண்டு) என்று அழைக்கப்படுகின்றன. பக்குவமடையாத பக்தனொருவன் தற்பொழுதுள்ள அவனுடைய புலன்களால் அவற்றைப் பயிற்சி செய்ய முடியும். இத்தகைய ஒழுக்க விதிகள் முக்கியமாக பகவானின் புகழைக் கேட்பதையும், அவற்றைப் பாடுவதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இத்தகைய கேட்டலும், பாடலும் பகதர்களின் சகவாசத்தில் மட்டுமே சாத்தியமாகக் கூடும் எனவே பகவானின் பக்தித் தொண்டில் பக்குமடைய ஜந்து முக்கியமான கொள்கைகளை பகவான் ஸ்ரீ சைதன்யர் சிபார்சு செய்துள்ளார். ஒன்று, பக்தர்களுடனான சகவாசம் (செவியுறுதல்); இரண்டு, பகவானின் புகழைப் பாடுதல்; மூன்று, தூய பக்தரிட மிருந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்பது; நான்கு, பகவானோடு சம்பந்தப்பட்டுள்ள ஒரு புனித இடத்தில் வசிப்பது; ஜந்து பகவானின் விக்கிரகத்தை பக்தியுடன் வழிபடுவது. இத்தகைய சட்டதிட்டங்கள் பக்தித் தொண்டின் பகுதிகளாகும்
( ஶ்ரீமத் பாகவதம் 2.9.31 / பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment