எந்த நோக்கத்திற்காகவே பகவான் மனித வாழ்வைப் படைத்துள்ளார் ?

 


பந்தப்பட்ட ஆத்மாவின் முக்திக்கு உதவும் பொருட்டே கடவுள் குறிப்பாக மானிட ரூபத்தைப் படைத்துள்ளார். எனவே மனித வாழ்வை துஷ்பிரயோகம் செய்பவன் நரகத்திற்கு வழியை அமைத்துக்கொள்கிறான். புருஷத்வே சாவிஸ்தராம் என்று வேதங்கள் கூறுவது போல், “மனித உருவிலுள்ள வாழ்வின் நித்திய ஆத்மாவைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளதுவேதங்களும் பின்வருமாறு கூறுகின்றன.

தாப்யோ காம் ஆனயத் தா அப்ருவன்
வை நோயம் அலம் இதி
தாப்யோஸ்வம் ஆனயத் தா அப்ருவன்
வை நோயம் அலம் இதி
தாப்ய- புருஷம் ஆனயத் தா
அப்ருவன் ஸுக்ருதம் பத

இந்த சுருதி மந்திரத்தின் பொருள் பின்வருமாறு: பசு, குதிரை முதலான தாழ்ந்த உயிரினங்கள் சிருஷ்டியின் நோக்கத்தை நிறைவேற்ற உண்மையில் பொருத்தமானவை அல்ல. ஆனால் கடவுளுடனான தனது நித்திய உறவைப் புரிந்து கொள்வதற்கு மனித வாழ்வு வாய்ப்பளிக்கிறது. எனவே ஒருவன் பௌதிக புலன்களை அடக்கி மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். ஒருவன் கிருஷ்ண உணர்வை மேற்கொண்டால், பரமபுருஷர் மிகவும் மகிழ்ந்து தமது பக்தனுக்குப் படிப்படியாக தம்மை வெளிப்படுத்துகிறார்.

பகவானுடைய ஜட சிருஷ்டியானது, ஜீவராசிகளையும், அறிவற்றவர்கள் அனுபவிக்க முயலும் உயிரற்ற ஜடத்தையும் கொண்டுள்ளது. ஆனால் ஆன்மீக இயற்கையைப் புரிந்து கொள்ளாத, குருட்டுத்தனமாக புலன் நுகர்வுக்குப் பாடுபடும் உயிரினங்களால் பகவான் திருப்தியடைவதில்லை. கிருஷ்ணரையும், அவரது இருப்பிடத்தின் ஆனந்தமயமான சூழ்நிலையையும் மறந்ததால் நாம் துன்புறுகிறோம். பகவானைக் காவலராகவும், புகலிடமாகவும் ஏற்று அவரது உத்தரவை நாம் நிறைவேற்ற வேண்டும். இதனால் பரமபுருஷரின் பின்னப்பகுதி என்ற நமது நித்திய, ஆனந்தமயமான இயற்கையை எளிதில் நம்மால் உயிர்த்தெழச் செய்யமுடியும். இந்த நோக்கத்திற்காகவே பகவான் மனித வாழ்வைப் படைத்துள்ளார்.


( ஶ்ரீமத் பாகவதம் 11.9.28 / பொருளுரை 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more