வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு விதமான உயிர்கள்

 


நவீன விஞ்ஞான யுகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்கின்றவர்கள், இப்பூமி ஒன்றில் மட்டுமே விஞ்ஞான அறிவும், புத்திசாலித் தனமும் நிறைந்த உயிர்கள் இருக்கின்றனவென்றும் பிற கோள்களில் இப்படிப்பட்ட உயிர்கள் ஏதும் இல்லை என்றும் பொதுக் கருத்துடையவர்களாக இருக்கின்றனர். வேத இலக்கியங்கள் இம்மூடக் கூற்றினை மறுக்கின்றன. வேத ஞானம் படைத்தவர்கள் வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு விதமான உயிர்கள் தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள். நாகர்கள், கின்னரர்கள், சாரணர்கள், சித்தர்கள், மற்றும் அப்ஸரர்கள் என்று இருக்கின்றார்கள் என்பதை அறிவர். வேதங்கள், இந்த பௌதீக வானத்தில் மட்டுமல்லாது ஆன்மீக வானத்திலும் பல்வேறு வகையான உயிர்கள் வாழ்கின்றன என்றும் தகவல்களைக் கூறுகின்றன. இங்குள்ள உயிர்கள் எல்லாம் ஒரே ஆன்மீகத் தன்மை உடையன. முழுமுதற் கடவுளிடமுள்ள அதே குணமுடையனவாகவும் இருந்த போதிலும் ஆத்மாவிற்கு நிலம், நீர், காற்று, தீ, வானம், மனம் புத்தி மற்றும் ஆணவம் என்னும் எண்வகைப் பொருள்களினாலான தேகம் உண்டாவதால் அவை பல்வேறு உடல்களைப் பெறுகின்றன. தெய்வீக உலகில் இதுபோல் உடலுக்கும், உருவுக்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. பௌதீக உலகில் உள்ள கோள்களில் பல்வேறு விதமான குணநலன்களும் அதற்கேற்றாற்போல் பல்வேறு விதமான உடல்களும் கொண்ட உயிர்கள் இருக்கின்றன. வேதங்களின் மூலமாக அது ஆன்மீகலோகமோ பௌதீக லோகமோ ஒவ்வொரு உலகத்திலும் வெவ்வேறு அறிவுகொண்ட உயிர்கள் பல இருக்கின்றன என்று நாம் அறிய வருகிறோம். பூலோக கிரஹங்களில் பூமி ஒன்றாகும். பூமிக்கு மேலாக ஆறு உலகங்களும், கீழாக ஏழு உலகங்களும் இருக்கின்றன. ஆதலினால் இம் முழுப் பிரபஞ்சமும் சதுர் தஸப்புவனம் அதாவது பதினான்கு உலகங்கள் கொண்டது என்று அழைக்கப்படுகின்றது. இப்பௌதீக வானத்திற்கு மேல்பரவ்யோமம்எனப்படும் ஆன்மீக வானம் இருக்கின்றது. அதில்தான் ஆன்மீக உலகங்கள் இருக்கின்றன. இந்த ஆன்மீக உலகவாசிகள் முழுமுதற் கடவுளுக்கும் பல்வேறு ரஸம் அல்லது உறவு முறைகளில் பக்தித் தொண்டு செய்கின்றனர். ரஸம் என்றால் பாவம் அல்லது உறவுமுறைகளாகும். அவை, தாஸ்ய ரஸம் ஸக்ய ரஸம், வாத்ஸல்ய ரஸம், மாதுர்ய ரஸம் இவற்றிற்கெல்லாம் மேலாக பராகீய ரஸம் போன்றவையாகும். இப்பராகீய ரஸம் அல்லது பரபுருஷக்காதல் கிருஷ்ணரின் உறைவிடமான கிருஷ்ண லோகத்தில் சர்வ சாதாரணமாகக் காணப்படுவதாகும். இதுவே கோலோக பிருந்தாவனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கேதான் பகவான் கிருஷ்ணர் நிலையாக இருந்து கொண்டு லட்சக்கணக்கான கோடிக்கணக்கான அவதாரங்களும் எடுக்கின்றார். அப்படிப்பட்ட அவதாரங்களில் ஒன்றுதான் இப்பௌதீக உலகில் ஒரு குறிப்பிடத்தக்க இடமானபிருந்தாவனதாமம்என்ற இடத்தில் அவர் எடுத்தது. அங்கேதான் அவர் ஆன்மீகவானிலுள்ள பிருந்தாவன தாமத்தில் செய்த ஆதி லீலைகளை பந்தப்பட்ட உயிர்களை மீட்டு அவற்றிற்கு விடுதலை அளித்து மீண்டும் முழுமுதற் கடவுளிடத்து திரும்பிச் செல்வதற்காக இந்த கோலோக பிருந்தாவனத்திலும் செய்கிறார்.


( ஶ்ரீமத் பாகவதம் 4.20.36 / பொருளுரை 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more