பதம் 1
கிருஷ்ண-ப்ரஸாதேந ஸமஸ்த-ஷைல-
சாம்ராஜ்யம் ஆப்நோதி ச வைரிணோ 'பி
சக்ரஷ்ய ய: ப்ரப பலிம் ச ஸாக்ஷாத்
கோவர்தனோ மே திஷாதம் அபிஷ்டம்
பிரபு கிருஷ்ணரின் கருணையினால், மலைகள் அனைத்திற்கும் பேரரசன் என்ற பெருமை பெற்றதும், பொறாமை கொண்ட எதிரியான இந்திரனிடமிருந்தே போற்றத் தகுந்த மதிப்பு, மரியாதையும், பாராட்டும் பெற்றதுமான மேன்மை மிக்க கோவர்த்தன மலையானது கருணையுடன் எனது உன்னத விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகின்றேன்.
பதம் 2
ஸ்வ-ப்ரேஷ்ட-ஹஸ்தம்புஜ-ஸௌகுமார்ய
ஸுகானுபுதேர் அதி-பூமி-வருத்தே:
மஹேந்ர-வஜ்ரஹதிம் அபி அஜனம்
கோவர்தநோ மே திஷாதம் அபிஷ்டம்
கோவர்த்தன மலையானது தனது உன்னத விருப்பத்தினால் இந்த பூமியில் அவதரித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. கிருஷ்ணரின் தாமரை திருக்கரங்களால் ஏந்தப்பட்டு மென்மையிலும் மென்மையை அடைந்ததால், இந்திரனின் கோபத்தினால் உண்டாக்கப்பட்ட, கடும் இடி, மின்னலுடன் கூடிய நாசக்கார மழையையும் கூட சிறு பூஞ்சாரல் போன்று ஏற்று புன்னகை பூத்த கோவர்த்தன மலையானது எனது உன்னத விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகின்றேன்.
பதம் 3
யத்ரைவ க்ருஷ்ணோ விருஷபானு-புத்ர்ய
தானம் க்ரிதும் கலஹம் விதேனே
ஸ்ருதே: ஸ்பிருஹ யத்ர மஹதி அத: ஶ்ரீ-
கோவர்தநோ மே திஷாதம் அபிஷ்டம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், வ்ருஷபானு- வின் புதல்வியிடம் சுங்கம் வசூலிக்க முயற்சி செய்த லீலைகளை, ஜீவன்களை உய்விக்க கூடியதான வேதங்களும் ருசிக்க ஏங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த பரமனேயான, கோவர்த்தன மலையானது எனது உன்னத விருப்பங்களை இனிதே நிறைவேற்ற வேண்டுகின்றேன்.
பதம் 4
ஸ்நாத்வா ஸரஹ ஸ்வஸு ஸமீர-ஹஸ்தி
யத்ரைவ நிபாதி-பரக-தூலிஹ்
ஆலோலயன் கேலதி சாரு ச ஶ்ரீ-
கோவர்தனோ மே திசாதம் அபிஷ்டம்
கதம்ப மரங்களால் சூழப்பட்ட வனத்தின் நடுவே அமைந்துள்ள எழில் மிகு நதியினுள், காற்றில் மிதந்து வரும் அழகிய காட்டு மலர்களின் நறுமணத்தை சுவாசித்து கொண்டு கஜராஜன் ஆனந்தமாக நீராடிக் களித்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய ஆனந்தமயமான இயற்கையை தன்னகத்தேயுடைய கோவர்த்தன மலையானது எனது உன்னத விருப்பங்களை இனிதே நிறைவேற்ற வேண்டுகின்றேன்.
பதம் 5
கஸ்தூரிகாபி: சைதம் கிம் அத்ரேத்ய
உஹம் ப்ரபோ: ஸ்வஸ்ய முஹுர் விதந்வந்
நைஷர்கிக-ஸ்விய-சில-ஸுகந்தைர்
கோவவிதந்வௌாோமே திஷதம் அபிஷ்டம் ॥
கோவர்த்தன மலையின் இனிய நறுமணமானது, அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கஸ்தூரி மான்களிடம் இருந்து உண்டானதா? அல்லது, அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் யசோதையின் மைந்தனிடமிருந்தா? அல்லது, கோவர்த்தன மலையே இயற்கையில் அந்நறுமணத்தை தன்னகத்தே கொண்டுள்ளதா? எவ்வாறாயினும் நறுமணமிக்க கோவர்த்தன மலையானது எனது உன்னத விருப்பங்களை இனிதே நிறைவேற்ற வேண்டுகின்றேன்.
பதம் 6
வம்ஷ-ப்ரதித்வந்ய-அநுசர-வர்த்மா
தித்ருக்க்ஷவோ யத்ர ஹரிம் ஹரிண்யா:
யந்த்யோ லபந்தே ந ஹி விஸ்மித: ச
கோவர்தநோ மே திஶதம் அபிஷ்டம்
மனம் மயக்கும் இனிய புல்லாங்குழலின் இசையில் மயங்கிய மான்கள் பிரபு ஹரியை கண்டு விடும் ஆவலில் ஓசை வரும் திசையை நோக்கி பாய்ந்தோடுகின்றன. ஆனால், என்ன ஆச்சர்யம்! செல்லுமிடமெல்லாம் புல்லாங்குழலின் இனிய ஓசையைத் தவிர கண்ணனை நேரில் காண இயலவில்லை. இவ்வாறாக கோவர்த்தன மலையாகவே உருவெடுத்துள்ள பகவான், எனது உன்னத விருப்பங்களை இனிதே நிறைவேற்ற வேண்டுகின்றேன்.
பதம் 7
யத்ரைவ கங்கம் அநு நவி ரதம்
ஆரோஹ்ய மத்யே து நிமக்ன-நௌக:
க்ருஷ்ணோ ஹி ரதாநுகாலோ பாபௌ ச
கோவர்தநோ மே திஷாதம் அபிஷ்டம்
இளம் ஜோடிகள் இருவரும் கங்கையில் உல்லாசமாக படகு சவாரி செய்து கொண்டிருக்கும் போது நடுவே திடீரென்று படகு மூழ்க ஆரம்பித்து விட்டது. உடனே கிருஷ்ணர், கவர்ச்சியும், வனப்பும் மிக்க ராதையின் கழுத்தில் கைகளை வளைத்து இறுகப் பற்றிக் கொண்டார். இவ்வாறான, பரமனின் லீலைகளே உருவெடுத்துள்ளதான கோவர்த்தன மலையே எனது உன்னத விருப்பங்களை இனிதே நிறைவேற்ற வேண்டுகின்றேன்.
பதம் 8
விநா பவேத் கிம் ஹரி-தாஸ-வர்ய-
பாதாஶ்ரயம் பக்திர் அத: ஶ்ரயாமி
யம் ஏவ ஸப்ரேம நிஜேசயோ: ஶ்ரீ-
கோவர்தநோ மே திஶதம் அபிஷ்டம் ॥
பிரபு ஹரியின் உன்னத சேவகனும் மற்றும் தலைவனும், தலைவியுமாகிய கிருஷ்ணர் மற்றும் ராதையின் மிக்க அன்பிற்குரியதுமாகிய, கோவர்த்தன மலையின் தாமரைப் பாத அடைக்கலத்தை பெற்றாலன்றி, ஒருவர் உன்னத பக்தித் தொண்டாற்றும் வாய்ப்பினை நினைவினாலும் அடைய முடியாது. எனவே கருணைமிகு கோவர்த்தன மலையே எனது உன்னத விருப்பங்களை இனிதே நிறைவேற்ற வேண்டுகின்றேன்.
பதம் 9
ஏதத் பதேத் யோ ஹரி-தாஸ-வர்ய-
மஹானுபவஷ்டகம் ஆர்த்ர-சேத:
ஸ்ரீ-ராதிகா-மாதவயோঃ பதாப்ஜ-
தஸ்யாம் ச விந்தே அச்சிரேண ஸாக்ஷாத்
பிரபு ஹரியின் உன்னத சேவகனைப் போற்றும் இந்த எட்டுப் பாடல்களை விருப்பத்துடன் பாடும் ஒவ்வொருவரும், தமது இதயம் முழுக்க தூய அன்பினால் வார்க்கப்பட்டு, அதிவிரைவில் ஸ்ரீ ஸ்ரீ ராதா மாதவனின் தாமரைப் பாத சேவையை பெற்று இன்புறுவது திண்ணம்.
ஸ்ரீ கோவர்த்தன பிரணாம மந்த்ரம்
ஸ்ரீ கோவர்த்தன பிரணாம மந்த்ராஸ்:
நமஸ்தே கிரிராஜாய:
ஸ்ரீ கோவர்த்தன நாமினே
அஸேஸ, க்லேஷ நாசாய பரமானந்த தயினே.
அனைத்து மலைகளுக்கும் அரசனாகிய கோவர்த்தன மலையரசனுக்கு எனது பணிவான வணக்கங்களை, நான் அன்புடன் சமர்ப்பிக்கின்றேன். கோவர்த்தன மலையே பசு, பூமி, மற்றும் புலன்களின் மகிழ்விற்கு இருப்பிடமாக திகழ்கின்றது. கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ணரின் சேவகர்களின் சேவகனாகவும் கோவர்த்தனன் விளங்குகின்றார். அவரே, அனைவருடைய எல்லையற்ற துன்ப சாகரத்தை வற்ற செய்து, பரமானந்தத்தை கருணையுடன் அனைவருக்கும் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
ஹரே கிருஷ்ணா! அருமையான பதிவு. நன்றிகள்.
ReplyDelete🙏
ReplyDelete