பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கொன்ற நரகாசுரன் என்ற அசுரனுக்கு துவிதன் என்றொரு வானர நண்பன் இருந்தான். தன் நண்பனின் மரணத்துக்குப் பழிவாங்க விரும்பிய துவிதன், இடையர்களின் வீடுகளுக்குத் தீ மூட்டினான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆனர்த்த தேசத்தை நாசப்படுத்தினான். மேலும் தன் வலிமைமிக்க கரங்களால் சமுத்திர நீரைக் கடைந்து கொந்தளிக்கச் செய்து கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான். அந்த அயோக்கியன் பிறகு மாமுனிவர்களின் ஆசிரமங்களிலுள்ள மரங்களை நாசப்படுத்தியதுடன், அவர்களுடைய வேள்வித் தீயில் மலஜலமும் கழித்தான். அவன் ஆண் பெண்களை கடத்திச் சென்று மலைக் குகைகளில் அடைத்து வைத்தான். முழு நிலப்பரப்பையும் இவ்வாறு நாசமாக்கி, கௌரவமான குடும்பங்களைச் சேர்ந்த பல இள மங்கைகளைக் கற்பழித்தபின், துவிதன் ரைவதக மலைப்பக்கம் வந்தான். அங்கு பகவான் பலராமர் அழகு மங்கையிரின் கூட்டத்திற்கு கிடையயில் களிப்புற்றிருப்பதைக் கண்டான். வாருணி மது வருத்தி போதையேறிவர் போல் காணப்பட்ட பகவான் பலதேவரை அலட்சியப்படுத்தி, அவர் முன்னிலையிலேயே அப்பெண்களிடம் தன் குதத்தைக் காட்டினான். மேலும் அவன் தன் புருவங்களால் அனாகரிகமான சைகைகளைச் செய்தும், மலஜலம் கழித்தும் அவர்களை அவமானப்படுத்தினான்.
தூவிதனின் அக்கிரமமான நடத்தை பகவான் பலதேவரின் கோபத்தைத் தூண்டியதால் அவர் ஒரு கல்லை எடுத்து அந்த வானரத்தின் மேல் வீசினார். ஆனால் துவிதன் அது தன்மேல் விழாத படி விலகிக் கொண்டான். பிறகு அவன் பலராமரை ஏளனம் செய்து, பெண்களின் ஆடைகளைப் பற்றியிழுத்தான். இந்த துடுக்குத்தனத்தைக் கண்ட பகவான் பலதேவர் அவனைக் கொன்றுவிட முடிவு மிச்து, தமது கதை மற்றும் கலப்பை ஆயுதங்களை எடுத்தார். சக்திவாய்ந்த துவிதன் பிறகு ஒரு சால மரத்தை வேருடன் பிடுங்கி பகவானின் தலையில் அடித்தான். ஆனால் பலராமர் அசையாமல் அங்கேயே நின்றபடி அந்த மரத்தை துண்டுதுண்டாக நொறுக்கித் தள்ளினார். துவிதன் மற்றொரு மரத்தைப் பிடுங்கினான். இப்டியே அந்த வனம் வெட்ட வெளியாகும் வரை ஒவ்வொரு மரமாக அன் பிடுங்கியெடுத்து பகவானைத் தாக்கினான். ஆனால் பகவான் எல்லா மரங்களையும் சுலபமாக உடைத்தெறிந்தார். பிறகு அந்த முட்டாள் வானரன் கல் மழை பொழியத் துவங்கினான். பகவான் பலதேவரும் அவற்றையெல்லாம் நொறுக்கிப் பொடியாக்கினார். அதன்பிறகு துவிதன் பகவானை நெருங்கி, தன் முஷ்டியால் பகவானின் மார்பைத் தாக்கி, அவரது கோபத்தைத் தூண்டினான். பகவான் தமது கலப்பை மற்றும் கதாயுதங்களை வைத்துவிட்டு, தூவிதனின் தொண்டையையும், தோள்பட்டையையும் தமது முஷ்டியால் குத்தினார். இதனால் அந்த வானரன் இரத்த வாந்தியெடுத்து, தரையில் விழுந்து மாண்டான்.
துவிதனைக் கொன்ற பிறகு, பகவான் பலதேவர் துவாரகைக்குப் புறப்பட்டார். அப்பொழுது தேவர்களும், முனிவர்களும் ஆகாயத்திலிருந்து பகவான் மேல் மலர்மாரி பொழிந்தும், அவர் துதிபாடியும், அவரிடம் பிரார்த்தனைகள் செய்தும் அவரை வணங்கினர்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment