ஒரு தூய பக்தன் பகவானிடம் எப்போதும் “உம்மிது தூய்மையான அன்பு வைக்க எனக்கு உதவுவீராக” என்று வேண்டுகின்றான்
பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் “யே யதா மாம்
ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாமி அஹம்”: யாவர் என்னை எங்ஙனம் சரணடைகின்றார்களோ நான் அதற்கேற்ப
அவர்களுக்கு அருள்பாலிக்கின்றேன். பகவானை ஒருவன் பக்தியுடன் அணுகினால் கூட, அப்பக்தனின்
பக்தியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக, பகவான் உடனே பதிலுக்கு அவன் மீது முழு
அன்பம் செலுத்தாதிருக்கலாம். எனினும் பகவான் உண்மையில் பதிலுக்கு அன்பு செலுத்துபவராகவே
இருக்கின்றார். ஒரு தூய பக்தன் பகவானிடம் எப்போதும் “உம்மிது தூய்மையான அன்பு வைக்க
எனக்கு உதவுவீராக” என்று வேண்டுகின்றான். ஆகையினால் பகவான் புறக்கணிக்கின்றார் எனப்படுவது,
அப்பக்தனின் வேண்டுகோளை உண்மையில் நிறைவேற்றுகின்றார் என்பதுவேயாகும். பகவான் கிருஷ்ணர்
தம்மீது நாம் செலுத்தும் அன்பினை, நம்மிடமிருந்து பிரிந்து செல்வதின் மூலம் தீவிரப்படுத்துகின்றார்.
இதன் விளைவு நாம் உண்மையில் எதனை விரும்பினோமோ, எதற்காகப் பிரார்த்தித்தோமோ அந்த முழுமெய்ப்
பொருள் கிருஷ்ணர் மீதான தீவிரமான காதலை நான் அடையப் பெறுகின்றோம். அதனால் வெளிப்படையாகத்
தோன்றும் கிருஷ்ணரின் புறக்கணிப்பானது உண்மையில் அவரது சிந்தனையார்ந்த பதில் செய்தலும்,
நமது ஆழமான, தூய விருப்பத்தினை நிறைவேற்றுதலுமேயாகும்.
( ஶ்ரீமத் பாகவதம் 10.32.20 / பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment