பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பொன்னிற அவதாரம்

 



க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம் 
ஸாங்கோபாங்காஸ்த்ர - பார்ஷதம்
யக்ஞை: ஸங்கீர்த்தன-ப்ராயைர் 
யஜந்தி ஹி ஸு-மேதஸ:


மொழிபெயர்ப்பு


கலியுகத்தில் சிறந்த புத்திமான்கள், சதா கிருஷ்ணருடைய நாமங்களைப் பாடிக் கொண்டிருக்கும் பகவானின் அவதாரத்தைக் கீர்த்தனை என்ற யாகத்தாலேயே பூஜிக்கின்றனர். அவரது வர்ணம் கருமையில்லை என்றாலும் அவர் கிருஷ்ணரேயாவார். அவர் தமது சகாக்களாலும், சேவகர்களாலும், ஆயுதங்களாலும், அந்தரங்கத் தோழர்களாலும் சூழப்பட்டிருக்கிறார்.


பொருளுரை


இதே பதம் கிருஷ்ணதாஸ கவிராஜரால் சைதன்ய சரிதாம்ருதத்தில் (ஆதி.3.52) மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இச்சுலோகத்திற்கு ஸ்ரீல பிரபுபாதா பின்வரும் பொருளுரையைக் கொடுத்துள்ளார். “ஜீவ கோஸ்வாமி கிரம-ஸந்தர்பம் என்ற தமது பாகவத் உரையில் இச்சுலோகத்தைப் பின்வருமாறு விளக்குகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பொன்னிறமாகவும் தோன்றுகிறார். அந்த பொன்னிற அவதாரம், இக்கலியுகத்தில் சிறந்த அறிவாளிகளால் பூஜிக்கப்படும் பகவான் சைதன்யராவார். இதை கர்க முனி பாகவதத்தில் உறுதி செய்துள்ளார். அதாவது, குழந்தை கிருஷ்ணர் கருப்பு, வர்ணம் என்றாலும், அவர் வேறு மூன்று வர்ணங்களில் கூட (சிவப்பு, வெள்ளை, மஞ்சள்) தோன்றுகிறார். அவர் சத்திய- யுகத்தில் வெள்ளை வர்ணத்திலும், திரேதா-யுகத்தில் சிவப்பு வர்ணத்திலும் தோன்றினார். மீதமுள்ள மஞ்சள் அல்லது பொன்னிறத்தில் அவர் பகவான் சைதன்யராகத் தோன்றினார்.

க்ருஷ்ண-வர்ணம் என்றால் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என்று ஸ்ரீல ஜீவகோஸ்வாமி விளக்குகிறார். க்ருஷ்ண-வர்ணம் என்றாலும் கிருஷ்ண சைதன்யர் என்றாலும் ஒன்றே பகவான் ஸ்ரீ சைதன்யர் பரமபுருஷராவார். ஆனால் அவர் எப்பொழுதும் கிருஷ்ணரை விவரிப்பதில் ஈடுபட்டு, அவரது நாம ரூபங்களைப் பாடியும், நினைந்தும் உன்னத ஆனந்தத்தை அனுபவிக்கிறார். மிக உயர்ந்த கடவுள் வாக்கைப் பிரசாரம் செய்யும் பொருட்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பகவான் சைதன்யராகத் தோன்றுகிறார். வர்ணயதி என்றால்கூறுகிறார்அல்லதுவர்ணிக்கிறார்என்று பொருள். பகவான் சைதன்யர் எப்பொழுதும் கிருஷ்ணருடைய நாமத்தை வர்ணித்துக்கொண்டே அதைப்பாடுகிறார். அவர் கிருஷ்ணரே என்பதால், அவரைச் சந்திப்பவர்கள் எல்லோரும் கிருஷ்ணரின் புனித நாமத்தைப் பாடுவதோடு, பிறகு அதைப் பிறருக்கு விவரிக்கவும் செய்கின்றனர். அவர் ஒருவனுக்குள் உன்னதமான கிருஷ்ண உணர்வைப் புகுத்தி,அவனை உன்னத ஆனந்தத்தில் மூழ்கடித்து விடுகிறார். எனவே, நேரிடையாகவோ அல்லது ஓசை மூலமாகவோ, எல்லா விதத்திலும் அவர் கிருஷ்ணராகவே எல்லோர் முன்னிலையிலும் தோன்றுகிறார். பகவான் சைதன்யரைப் பார்த்த மாத்திரத்தில் ஒருவனுக்கு உடனே கிருஷ்ணரின் நினைவு வந்துவிடுகிறது. எனவே அவரை விஷ்ணு-தத்வமாக ஏற்றுக் கொள்ளலாம். அதாவது, பகவான் சைதன்யர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார்.

ஸங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம் என்ற சொல், பகவான் சைதன்யர் கிருஷ்ணரே என்பதையே மேலும் குறிப்பிடுகிறது. அவரது உடல் எப்பொழுதும் சந்தன மர ஆபரணங்களாலும் சந்தனப் பசையாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவர் தமது பேரழகினால் கலியுக மக்களைத் ஈர்க்கிறார். தோற்கடிக்கிறார் மற்ற அவதாரங்களின் போது, அசுரர்களைத் தோற்கடிக்க பகவான் சிலசமயம் ஆயுதங்களை பிரயோகித்தார். ஆனால இக்கலியுகத்தில் அவர் சைதன்ய மகாபிரபுவாகத் தோன்றி தமது பரிபூரண கவர்ச்சியுடைய தோற்றத்தினாலேயே அவர்களை வெல்கிறார். சைதன்யரின் அழகே அசுரர்களைத் தேற்கடிக்கும் அவரது ஆயுதம் என்று ஸ்ரீல ஜீவகோஸ்வாமி விளக்குகிறார். அவர் பூரண கவர்ச்சியுடையவர் என்பதால், அனைத்து தேவர்களும் அவரது துணைவர்களாக அவருடனேயே வாழ்ந்தனர் என்பதாகப் புரிந்துகொள்ளவேண்டும். அவரது செயல்கள் அசாதாரணமானவை. அவரது சகாக்கள் அற்புமானவர்கள். அவர் சங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்பியபோது, குறிப்பாக வங்காளத்திலும், ஒரிஸ்ஸாவிலும் பல சிறந்த பண்டிதர்களையும், ஆசாரியர்களையும் அவர் கவர்ந்தார். பகவான் சைதன்யர் எப்பொழுதும் அவரது சிறந்த சகாக்களான பகவான் நித்தியானந்தர், அத்வைதர், கதாதரர், ஸ்ரீவாஸர் போன்றவர்களால் சூழப்பட்டிருந்தார்.

ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி வேத இலக்கியத்திலிருந்து பின்வரும் கருத்தை மேற்கோள் காட்டுகிறார். அதாவது யாகங்களையோ அல்லது வேதக் கிரியைகளையோ செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் கூறுகிறார். இதற்குப் பதிலாக ஜாதி மத பேதமின்றி எல்லோரும் ஒன்று கூடி ஹரே கிருஷ்ண மந்திரத்தைப்பாடி பகவான் சைதன்யரைப் பூஜிக்கலாம். கிருஷ்ணர் என்ற பெயருக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையே க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணாம் என்ற சொற்கள் குறிப்பிடுகின்றன. பகவான் சைதன்யர் கிருஷ்ணரின் நாமத்தைப் பாடி கிருஷ்ண உணர்வை போதித்தார். எனவே பகவான் சைதன்யரைப் பூஜிக்க, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்று அனைவரும் கீர்த்தனம் செய்யவேண்டும். தேவாலயம், ஆலயம், மசூதி ஆகிய இடங்களில் வழிபாடு செய்யும்படி பிரச்சாரம் செய்வது சாத்தியமில்லை. ஏனெனில் அவற்றில் மக்களுக்கு ஆர்வமில்லை. ஆனால் எங்கு வேண்டுமனாலும் மக்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை பாடலாம். இவ்வாறு பகவான் சைதன்யரை வழிபடுவதன் மூலம் பரம புருஷரை எளிதில் ஒருவர் திருப்திப்படுத்தலாம்.

பகவான் சைதன்யரின் புகழ்பெற்ற சீடரான ஸ்ரீல சார்வபௌம பட்டாச்சாரியர் கூறுகிறார். ‘உன்னத பக்தித் தொண்டின் அடிப்படைக்கொள்கை மறைந்துவிட்டதால், அதை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் தோன்றியுள்ளார். அவர் கருணை கூர்ந்து கிருஷ்ண பிரேமையை வாரி வழங்குகிறார். ரீங்காரமிடும் வண்டுகள் தாமரைப் பூவினால் கவரப்படுவதுபோல், அனைவரும் பகவான் சைதன்யரின் பாதங்களால் மேன்மேலும் கவரப்பட வேண்டும்.”

சைதன்ய மகாபிரபுவின் அவதாரத்தைப் பற்றி ஸ்ரீ விஷ்ணு-ஸஹஸ்ரநாமத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. இது மகாபாரதத்தின், தான-தர்மபர்வதத்தில் 189ம் அத்தியாயத்தில் காணப்படுகிறது. ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி இதைப் பின்வருமாறு மேற்கோள் காட்டியுள்ளார். ஸுவர்ண-வர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சந்தானங்கதீ, “ அவரது ஆரம்ப லீலைகளில் பொன்னிறமுள்ள ஒரு குடும்பஸ்தராக அவர் தோன்றுகிறார். அவரது அவயவங்கள் அழகாகக் காணப்படுகின்றன. சந்தனம் பூசிய அவரது உடல் உருக்கிய தங்கம்போல் ஜொலிக்கிறது.” மேலும் அவர் பின்வருமாறு மேற்கோள் காட்டியுள்ளார். ஸந்யாஸ க்ருச்சம: சாந்தோ நிஷ்டா சாந்தி-பராயண: “அவரது பிந்திய லீலைகளின்போது அவர் துறவு பூண்டு சமநோக்கும், சாந்தியும் உடையவராக விளங்குகிறார். அவர் பக்தரல்லாத அருவவாதிகளை பேச்சற்றவர்களாகச் செய்வதால், சாந்திக்கும், பக்திக்கும் மிக உயர்ந்த இருப்பிடமாவார்.”


ஶ்ரீமத் பாகவதம் 11.5.32 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more