நம்முடைய உண்மையான வீடு பகவானின் இராஜ்யத்தில் உள்ளது பௌதிக வீட்டிலேயே இருக்க நாம் பிடிவாதமாக உறுதி கொண்ட போதிலும், பௌதிக அரங்கிலிருந்து மரணம் நம்மை பலாத்தகாரமாக வெளியே தள்ளிவிடும். வீட்டிலிருப்பது கெட்டதல்ல, அன்பானவர்களிடம் நம்மை அர்ப்பணித்துக் கொல்வதும் கெட்டதல்ல. ஆனால் நம்முடைய உண்மையான வீடு நித்தியமானது என்பதையும், அது ஆன்மீக இராஜ்யத்தில் உள்ளது என்பதையம் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மனித வாழ்வு நமக்குத் தானாகவே அளிக்கப்பட்டுள்ளது என்பதையே அயந்னத: எனும் சொல் குறிப்பிடுகிறது. நம் மனித உடல்களை நிர்மாணித்தவர்கள் நாமல்லா. எனவே “இது என்னுயை உடல்” என்று முட்டாள்தனமாக நாம் உரிமை கொண்டாடக் கூடாது. மனித ரூபம், கடவுளால் அளிக்கப்பட்ட ஒரு பரிசாகும். இதை இறை உணர்வின் பூரணத்துவத்தை அடைவதற்காக உபயோகிக்க வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாதவன், மந்தபுத்தி (அஸன்-மதி) உடையவனாவான்.
( ஶ்ரீமத் பாகவதம் 10.51.46 / பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment