ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரைப் போலவே முற்றிலும் ஆன்மீகமயமானவள். அவளை பௌதிகமாக யாரும் கருதக் கூடாது. அவள் நிச்சயமாக, பௌதிகப் புலன்களால் மூடப்பட்டு, ஸ்தூலம், சூட்சுமம் என்று பௌதிக உடல்களைக் கொண்டுள்ள கட்டுண்ட உயிர்வாழிகளைப் போன்றவள் கிடையாது. அவள் முற்றிலும் ஆன்மீகமானவள், அவளது உடல், அவளது மனம் என இரண்டும் அதே ஆன்மீக ஸ்வரூபம் கொண்டவை. அவளுடைய உடல் ஆன்மீகமானது என்பதால், அவளது புலன்களும் ஆன்மீகமானதே. இவ்வாறாக, அவளது உடல், மனம் புலன்கள் என அனைத்தும் கிருஷ்ண பிரேமையினால் முழுமையாக ஜொலிக்கின்றன. அவள் ஹ்லாதி,னீ சக்தியின் (பகவானது அந்தரங்க சக்தியின் ஆனந்தமளிக்கும் சக்தியின்) ஸ்வரூபம் என்பதால், ஸ்ரீ கிருஷ்ணருடைய இன்பத்திற்கு அவள் மட்டுமே மூலமாவாள்.
அகத்தில் தம்மிடமிருந்து வேறுபட்ட எதனையும் ஸ்ரீ கிருஷ்ணரால் அனுபவிக்க முடியாது. எனவே, ராதையும் ஸ்ரீ கிருஷ்ணரும் வேறுபட்டவர்கள் அல்லர். ஸ்ரீ கிருஷ்ணருடைய அந்தரங்க சக்தியின் ஸந்தி,னீ பகுதியானது முழு கவர்ச்சியுடைய ஸ்ரீ கிருஷ்ணரின் ரூபத்தை வழங்கியுள்ளது, அதே அந்தரங்க சக்தி ஹ்லாதி னீயின் அம்சத்தில். அனைவரையும் கவரக்கூடியவரை கவரக்கூடிய ஸ்ரீமதி ராதாராணியை வழங்கியுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக லீலைகளில் ஸ்ரீமதி ராதாராணிக்கு இணையானவர் வேறு எவரும் இல்லை.
ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் - ஆதிலீலை - 4.71 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment