ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 5
பகவான் வாமனதேவர் பலி மகாராஜனிடம் யாசித்தல்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இப்பத்தொன்பதாம் அத்தியாம், எப்படி பகவான் வாமனதேவர்
மூன்றடி நிலத்தை தானமாகக் கேட்டார் என்பதையும், எப்படி பலி மகாராஜன் அவரது திட்டத்திற்கு
சம்மதித்தார் என்பதையும், பகவான் வாமனதேவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதிலிருந்து பலி
மகாராஜனை சுக்ராசார்யர் எப்படி தடுத்தார் என்பதையும் விவரிக்கிறது.
வாமனதேவரை ஒரு பிராமண புத்திரரென்று எண்ணிய
பலி மகாராஜன், அவர் விரும்பிய எதையும் கேட்கலாம் என்று அவரிடம் கூறினார். அப்போது பகவான்
வாமனதேவர் இரண்யகசிபு மற்றும் இரண்யாக்ஷன் ஆகியோரின் வீரதீரச் செயல்களைப் புகழ்ந்து
பேசினார். பலி மகாராஜன் பிறந்த குடும்பத்தை இவ்வாறு புகழ்ந்த பின், ராஜனிடம் அவர் மூன்றடி
நிலத்தை யாசித்தார். இது மிகவும் அற்பமானதாகையால், இந்த நிலத்தை தானமாகக் கொடுக்க பலி
மகாராஜன் ஒப்புக் கொண்டார். ஆனால் வாமனதேவர் தேவர்களின் நண்பரான விஷ்ணு என்பதைப் புரிந்துகொண்ட
சுக்ராசார்யர், இந்த நிலத்தைக் கொடுக்க வேண்டாம் என்று பலி மகாராஜனைத் தடுத்தார். பலி
மகாராஜனின் வாக்குறுதியை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி சுக்ராசார்யர் அவருக்கு அறிவுரை
கூறினார். மற்றவர்களை ஜயிப்பது, கேலி செய்வது, ஆபத்துக்குத் தக்கவாறு இயங்குவது, மற்றவர்களின்
நன்மைக்காக செயற்படுவது முதலான சூழ்நிலைகளில் ஒருவர் தனது வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கலாம்,
அதில் தப்பில்லை என்று அவர் விளக்கினார். இந்த தத்துவத்தின் மூலமாக, பகவான் வாமனதேவருக்கு
நிலத்தைக் கொடுப்பதிலிருந்து பலி மகாராஜனை சக்ராசார்யர் தடுக்க முயன்றார்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8 / அத்தியாயம் 19 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment