ஸ்ராத்தம் என்பது
வேதத்தைப் பின்பற்றுபவர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சடங்கு முறையாகும். இது ஓர் ஆண்டில் 15 நாட்கள் நடைபெறும். அப்பொழுது சடங்கு
முறைகளைச் செய்யும் மதவாதிகள், பிரிந்து சென்ற
ஆன்மாக்களுக்குப் படையல்
கொடுக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர். இவ்வாறு அந்த
பிதாக்களும் முன்னோர்களும், இயற்கையின் மாற்றங்களால், ஜடவுலக இன்பம்
அனுபவிக்க முழுமையான உடல் இல்லாத
நிலையில் அவர்கள்
சந்ததியினரால் தரப்படும் ஸ்ராத்தப் படையலினால் மீண்டும் அத்தகைய
உடல்களைப் பெற முடியும். ஸ்ராத்தம் அல்லது
பிரசாதத்துடன் தரும்
படையல் நிகழ்ச்சி இன்றும் இந்தியாவில், சிறப்பாக கயா நகரில்
இருக்கின்றது. அங்கு புகழ் வாய்ந்த
கோயிலில் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களில் படையல் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு
பகவான் சந்ததிகளின் பக்தித் தொண்டினால் மகிழ்வதால், அவருடைய அருளால்
முழு உடலற்ற
முன்னோர்களின் கண்டனத்துக்கு உரிய
ஆன்மாக்களை விடுவிக்கிறார். ஆன்மீக முன்னேற்ற வளர்ச்சிக்காக, அவர்கள்
மீண்டும் முழு
உடலைப் பெறுவதற்கு உதவுகிறார்.
துரதிர்ஷ்டவசமாக, மாயையின் பாதிப்பினால், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா, புலன் திருப்திக்காக தான்
பெற்ற உடலை
உபயோகிக்கிறது. இப்படிச் செய்வதால், அந்த ஆன்மா
அருவ உடலுக்குத் திரும்பிவிடும் என்பதை
அது மறந்துவிடுகிறது. பகவானின் பக்தன் அல்லது
கிருஷ்ணரைப் பற்றிய
உணர்வில் இருப்பவர், ஸ்ராத்தம் போன்ற
சடங்கு முறைகளை
நிகழ்த்த வேண்டிய
அவசியமில்லை. ஏனென்றால், அவர்
எப்போதும் பகவானை
மகிழ வைக்கிறார். அதனால்
அவருடைய பிதாக்களும் முன்னோர்களும் துன்பத்தில் இருந்திருந்தால் தானாவே
அதிலிருந்து விடுதலை
பெறுவார்கள். இதற்குத் தக்க
சான்று பிரஹ்லாத மஹாராஜா ஆவார். பிரஹ்லாத மஹாராஜா
பாவம் செய்த
தன் தந்தையை
விடுவிக்கும்படி பலமுறை
பகவானின் தாமரைப்
பாதங்களை வேண்டினார். பிரஹ்லாதரைப் போன்ற வைஷ்ணவர் பிறந்த குடும்பத்தில், அவருடைய
தந்தை மட்டும்
அல்லாமல் அவர்
தந்தையின் தந்தை, அவர்களின் பிதாக்கள், பதினான்காவது தந்தை
வரை, தானாகவே விடுவிக்கப் பெறுவார்கள் என்று
பகவான் பதிலளித்தார். அதனால், முடிவு என்னவென்றால், எல்லா
உயிர்ப் பொருள்களுக்கும், சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் கிருஷ்ணரைப் பற்றிய ஒட்டு
மொத்தமான உணர்வு
தேவை. சைதன்ய சரிதாம்ருதத்தில் ஆசிரியர் கூறுகிறார்: கிருஷ்ணர் பற்றிய
உணர்வு நிலையைக் கற்று அறிந்தவர் எந்த சடங்குகளையும் செய்யமாட்டார். ஏனென்றால் கிருஷ்ணர் பற்றிய
முழு உணர்வு
நிலையில் கிருஷ்ணருக்குத் தொண்டு
செய்தால் எல்லா
சடங்குகளும் தானாகவே
செய்யப்பட்டுவிடும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment