ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 8
பலி மகாராஜன் தமது வாழ்வை அர்ப்பணித்தல்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இந்த இருபத்திரண்டாம் அத்தியாயத்திற்கான சுருக்கம்
பின்வருமாறு: பலி மகாராஜனின் நடத்தையில் பரமபுருஷ பகவான் மகிழ்ந்தார். இவ்வாறாக சுதள
லோகத்தில் அவரை வைத்த பகவான், அவருக்கு வரங்களை அளித்தபின், அவரது வாயில் காப்போனாக
இருக்கச் சம்மதித்தார்.
பலி மகாராஜன் மிக மிக உண்மையானவராக இருந்தார்.
சத்தியத்தை மீறியவர் சமூகத்தின் கண்களில் அற்பமானவராகத் தோன்றுவார் என்பதால், தமது
வாக்குறுதியைக் காப்பாற்ற இயலாத பலி மகாராஜன் பெரும் அச்சத்திற்குள்ளானார். உயர்ந்த
நிலையில் இருப்பவரால் நரக வாழ்வில் பலன்களை சகித்துக் கொள்ள முடியும். ஆனால் சத்தியத்திலிருந்து
விலகியதால் ஏற்படும் அவதூறுக்கு அவர் மிகவும் அஞ்சுகிறார். பரமபுருஷரால் அளிக்கப்பட்ட
தண்டனையை பலி மகாராஜன் பெரு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். விஷ்ணுவிடம் விரோதம்
கொண்டதால், பல அஷ்டாங்க பலி மகாராஜனின் வம்சத்தில் பலர் இருந்தனர். குறிப்பாக பிரகலாத
மகாராஜனுக்கு பக்தித் தொண்டில் இருந்த மனவுறுதியை பலி மகாராஜன் நினைவு கூர்ந்தார்.
இவைகளை எல்லாம் கருத்திற் கொண்ட அவர், விஷ்ணுவின் மூன்றாவது அடிக்குத் தமது தலையையே
தானமாகக் கொடுக்க முடிவு செய்தார். முழுமுதற் கடவுளை திருப்திபடுத்துவதற்காக சிறந்த
புண்ணிய புருஷர்கள் எப்படி தங்களது குடும்ப உறவுகளையும், பௌதிக உடைமைகளையும் துறந்தனர்
என்பதையும் பலி மகாராஜன் கருத்திற் கொண்டார். உண்மையில், பகவானின் அந்தரங்கத் தொண்டர்களாக
ஆகும் நோக்கத்தில், அவரைத் திருப்திபடுத்துவதற்காக, சில சமயங்களில் அவர்கள் தங்களது
உயிரையே தியாகம் செய்துள்ளனர். அதற்கேற்ப, முந்தைய ஆசார்யர்கள் மற்றும் பக்தர்களின்
அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் மூலமாக, தாம் பெற்றி பெற்றதாகவே பலி மகாராஜன் கருதினார்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8 / அத்தியாயம் 22 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment