ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 9
தேவர்கள் சுவர்க்க லோகங்களை திரும்பப் பெறுதல்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பலி மகாராஜன் எப்படி தமது பாட்டனாரான பிரகலாத
மகாராஜனுடன் சுதள லோகத்திற்குள் புகுந்தார் என்பதையும், எப்படி பரமபுருஷ பகவான் இந்திரனை
சுவர்கக லோகத்தில் மீண்டும் புக அனுமதித்தார் என்பதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது.
பூரண சரணாகதியில், பகவானின் தாமரைப் பாதங்களின்
பக்தித் தொண்டை அடைவதுதான் வாழ்வின் மிகப்பெரிய நன்மை என்பதை மகாத்மாவான பலி மகாராஜன்
அனுபவித்து அறிந்தார். இந்த முடிவில் அவர் நிலையாக இருந்ததால், அவரது இதயத்தில் பக்திப்
பரவசமும், கண்களில் ஆனந்தக் கண்ணீரும் ததும்ப, பரமபுருஷ பகவானுக்கு அவர் தமது வணக்கங்களைச்
சமர்ப்பித்தார். அதன் பிறகு, தமது சகாக்களுடன் அவர் சுதளம் எனப்படும் லோகத்திற்குள்
புகுந்தார். இவ்வாறாக பரமபுருஷ அதிதியின் ஆசையை நிறைவேற்றி தேவேந்திரனை மீண்டும் பதவியில்
அமர்த்தினார். பலி விடுதலை செய்யப்பட்டதை அறிந்த பிரகலாத மகாராஜன், பிறகு பரமபுருஷ
பகவான் இவ்வுலகில் நிகழ்த்திய தெய்வீகமான திருவிளையாடல்களை விளக்கினார். பௌதிக உலகை
படைத்ததற்காகவும், அனைவரிடமும் சமமாக இருப்பதற்காகவும் மற்றும் கற்பக விருட்சத்தைப்
போல், பக்தர்களிடம் மிகவும் தயாள குணம் கொண்டவராக இருப்பதற்காகவும் பரமபுருஷரை பிரகலாத
மகாராஜன் போற்றிப் புகழ்ந்தார். உண்மையில், பகவான் அவரது பக்தர்களிடம் மட்டுமல்லாமல்,
அசுரர்களிடம் கூட அன்பு கொண்டுள்ளார் என்று அவர் புகழ்ந்தார். மேலும் பரமபுருஷரின்
வரம்பற்றதும், காரணமற்றதுமான கருணையையும் அவர் விவரித்தார். பிறகு, கூப்பிய கரங்களுடன்,
பகவானுக்குத் தமது பணிவான வணக்கங்களை அவர் சமர்ப்பித்தார். மேலும் பகவானை வலம்வந்த
பின், அவரது உத்தரவுப்படி பிரகலாத மகாராஜனும் சுதள லோகத்திற்குச் சென்றார். பகவான்
பிறகு சுக்ராசார்யரை அழைத்து, யாகச் சடங்கை நிறைவேற்றுவதில் பலி மகாராஜன் செய்த குற்றங்களையும்,
குறைகளையும் விளக்கும்படி உத்தரவிட்டார். பகவானின் புனித நாமங்களை உச்சரித்ததால் பலன்நோக்குக்
கருமங்களிலிருந்து சுக்ராசார்யர் விடுபட்டார். மேலும் பகவானின் நாம ஜபம் எப்படி பந்தப்பட்ட
ஆத்மாக்களின் குறைகளையெல்லாம் போக்கிவிடும் என்பதையும் அவர் விளக்கினார். பிறகு அவர்
பலி மகாராஜனின் யாகச் சடங்கை பூர்த்தி செய்தார். பகவான் வாமன தேவர் தேவேந்திரனுக்கு
சுவர்க்க லோகப் பதவியை திருப்பிக் கொடுத்ததால், பெரும் முனிவர்கள் அனைவரும் அவரை இந்திரனின்
பரோபகாரியாக ஏற்றதுடன், எல்லாப் பிரபஞ்ச விவகாரங்களையும் பராமரிப்பவராகவும் ஏற்றனர்.
பெரும் மகிழ்ச்சியடைந்த இந்திரன், வாமன தேவரை தனக்கெதிரில் அமரச் செய்து, தனது சகாக்களுடன்
விமானத்தில் புறப்பட்டுச் சென்று சுவர்க்க லோகத்திற்குள் மீண்டும் பிரவேசித்தார். பலி
மகாராஜனின் யாக அரங்கில் பகவான் விஷ்ணுவின் அற்புதச் செயல்களைக் கண்ட தேவர்கள், புண்ணிய
புருஷர்கள், பிதாக்கள், பூதர்கள் மற்றும் சித்தர்கள் ஆகிய அனைவரும் பகவானை திரும்பத்
திரும்பப் போற்றிப் புகழ்ந்தனர். பகவான் விஷ்ணுவின் பெருமை மிக்க செயல்களைப் பற்றி
பாடுவதும், கேட்பதுவுமே பந்தப்பட்ட ஆத்மாக்களுக்குரிய மிகவும் மங்களகரமான கடமை என்று
கூறுவதன் மூலமாக இந்த அத்தியாயம் நிறைவு பெறுகிறது.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8 / அத்தியாயம் 23)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment