(ஜய) குஞ்ஜ-பிஹாரீ
(ஜய) கோபீ-ஜன-வல்லப
(ஜய) கி.பூரி-வர-தா ரீ
(ஜய) ஜஷோதா -நந்தன,
(ஜய) வ்ரஜ-ஜன-ரஞ்ஜன
(ஜய) ஜா,முன-தீர-வன-சாரீ
கிருஷ்ணர் ராதையின் காதலர். அவர் விருந்தாவனப் புதர்களில் பல்வேறு சிருங்கார லீலைகளை வெளிப்படுத்துகிறார். அவர் விருந்தாவனத்தின் ஆயர்குல கன்னிப் பெண்களின் காதலராவார், கோவர்தனம் எனப்படும் மாபெரும் மலையை உயர்த்திப் பிடித்தவர்,அன்னை யசோதையின் அன்பிற்குரிய மகன், விரஜவாசிகளுக்கு மகிழ்ச்சியளிப்பவர், யமுனை நதிக்கரையின் காடுகளில் உலா வருபவர்.
(இந்தப் பாடல் ஸ்ரீல பிரபுபாதருக்கு மிகவும் பிடித்தமானதாகும், அவர் இதனை தம்முடைய சொற்பொழிவுகளுக்கு முன்பாகப் பாடுவது வழக்கம். அலகாபாத்திலும் கோரக்புரிலும் இப்பாடலின் முதல் இரண்டு வரிகளைப் பாடிய பின்னர், ஸ்ரீல பிரபுபாதர் ஸ்தம்பித்த நிலைக்குச் சென்றார். சிறிதுநேரம் கழித்து வெளிப்புற உணர்விற்குத் திரும்பியபோது, அவர் பக்தர்களை ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபடுமாறு கூறினார். "இந்தப் பாடல் விருந்தாவனத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது . ஸ்ரீமதி ராதாராணி, விருந்தாவனம், கோவர்தனம், யசோதை, ஆயர்குலச் சிறுவர்கள் என அனைத்தும் இப்பாடலில் உள்ளது," என்றும் ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்.)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment