ராதாக்ருஷ்ண போல் கீதாவழியிலிருந்து)
ராதா க்ருஷ்ண போல் போல் போலோரே சோபாய்
(ஏஇ) சிகா தியா சப் நதீயா
பிர்ச்சே நேசே: கௌர நிதாய்
(மிச்சே) மாயார் போசே- - யாச்சோ பேசே
காச்சோ ஹாபு துபு பாய்
(ஜீவ்) க்ருஷ்ண தாஸ்-- ஏ பிஸ்வாஸ்
கோர்லே தோ ஆர் துக்கோ நாஇ
(க்ருஷ்ண) போலபே ஜபே - புலக் ஹபே
ஜோர்பே ஆங்கி போலிதாய்
(ராதா) க்ருஷ்ண போலோ- சங்கே சலோ
ஏஇ மாத்ரா பிக்கா சாய்
(ஜாய்) சகல் பி போத் பக்திவினோத்
போலே ஐகோன் ஓ நாம் காய்
எல்லோரும் பாடுங்கள் ! எல்லோரும் பாடுங்கள்! "ராதாக்ருஷ்ண" "ராதாக்ருஷ்ண " என்று பாடுங்கள்! பாடுங்கள்! என்று போதனையை எல்லோருக்கம் போதித்துக் கொண்டு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் நித்யாநந்த பிரபுவும் நாடிய சேதமெங்கும் நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஓ சகோதர்ரே, நீர் அநாவசியமாக மாயையின் பிடியில் சிக்குண்டு துன்பப்படுகிறீர்கள், அவளுடைய அலைகளால் சில சமயம் மாயையெனும் சமுத்திரக் கடலில் மேலே மிதந்து கொண்டும் சிலசமயம் அதனுள் மூழ்கியும் தவிக்கிறீர்கள்
நீங்கள் ஆத்மா, பகவான் க்ருஷ்ணரின் நித்யமான சேவகன் என்பதை நம்பினால் இதற்குமேல் உங்களுக்கு துன்பமில்லை. பகவான் க்ருஷ்ணரின் நாமத்தை ஓதினால் இறைபக்தியில் உமது உடல் பரவசத்தில் நடுங்கும், உமது கண்கள் நீரை சொரியும் இது தான் நான் சொல்வது
பக்தர் கூட்டத்துடன் சேர்ந்து ராதாக்ருஷ்ண என்று பாடுங்கள் இதைத்தான் நான் உங்களிடம் கேட்கிறேன் பக்திவிநோத தாகூர் ஆகிய நான் சொல்கிறேன். பகவானின் புனித நாமங்களை நான் பாடும் போது என்னை நோக்கும் அபாயங்கள் விலகிச் செல்கின்றன
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment