ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 1
பலி மகாராஜன் சுவர்க்க லோகங்களைக் கைப்பற்றுதல்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
விஸ்வஜித் - யக்ஞத்தைச் செய்து முடித்தபின்,
பலி மகாராஜன் எப்படி ஓர் இரதத்தையும், யுத்தத்திற்குத் தேவையான பல்வேறு வகையான உபகரணங்களையும்
வரமாகப் பெற்றார் என்பதையும், இவற்றைக் கொண்டு அவர் எப்படி சுர்க்க ராஜனைத் தாக்கினார்
என்பதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. அவரிடம் அச்சங் கொண்ட தேவர்கள் அனைவரும்,
அவர்களது குருவின் உபதேசத்தின் படி, சுவர்க்க லோகங்களை விட்டு வெளியேறிவிட்டனர்.
பலி மகாராஜனிடமிருந்து மூன்றடி நிலத்தை யாசிப்பதைச்
சாக்காகக் கொண்டு, பகவான் வாமனதேவர் எப்படி அனைத்தையும் பறித்துக் கொண்டு, அவரைக் கைது
செய்தார் என்பதை பரீட்சித்து மகாராஜன் அறிய விரும்பினார். இவ் விசாரணைக்குப் பின்வரும்
விளக்கத்துடன் சுகதேவ கோஸ்கூாமி பதிலளிக்கிறார். இக்காண்டத்தின் பதினொன்றாம் அத்தியாயத்தில்
விளக்கப்பட்டது போல், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில் பலி தோற்றுப்போய்
மரணமடைந்தார். ஆனால் சுக்ராசார்யரின் கருணையால் தமது உயிரை அவர் திரும்பப் பெற்றார்.
இவ்வாறாக, தமது ஆன்மீக குருவான சுக்ராசார்யரின் சேவையில் அவர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
பிருகுவின் சந்ததியினர் அவரிடம் திருப்தியடைந்து, அவரை விஸ்வஜித் - யாகத்தில் ஈடுபடுத்தினர்
அந்த யாகம் நிறைவேறியதும், யாகத்தீயிலிருந்து ஓர் இரதம், குதிரைகள், கொடி, ஒரு வில்,
கவசம் மற்றும் இரு அம்பறாத் தூணிகளுடன் அம்புகள் ஆகியவை வெளிவந்தன. பலி மகாராஜனின்
பாட்டனாரான பிரகலாத மகாராஜன் வாடாத மலர் மாலையொன்றை பலிக்கு வழங்கினார். சுக்ராச்சார்யர்
அவருக்கு ஒரு சங்கை வழங்கினார். பலி மகாராஜன் பிரகலாதருக்கும், பிராமணர்களுக்கும்,
தமது குருவான சுக்ராச்சார்யருக்கும் வணக்கம் செலுத்தினர். பிறகு இந்திரனோடு போரிடுவதற்குத்
தம்மை ஆயத்தம் செய்து கொண்ட பின், தமது போர் வீரர்களுடன் இந்ரிபுரிக்குச் சென்றார்.
தமது சங்கை ஊதிய அவர் இந்திரனடைய இராஜ்யத்தின் எல்லைப்புறங்களைத் தாக்கினார். பலி மகாராஜனின்
திறமையைக் கண்ட இந்திரன், தமது சொந்த ஆன்மீக குருவான பிருஹஸ்பதியிடம் சென்று, பலியின்
பலத்தைப் பற்றி அவரிடம் கூறி, இப்போது தான் செய்ய வேண்டியது என்னவென்று வினவினார்.
பலி மகாராஜனுக்கு பிராமணர்களால் அதசாதாரணமான சக்தி அளிக்கப்பட்டு உள்ளது. ஆகவே தேவர்களால்
அவடன் போரிட முடியாது என்று பிருஹஸ்பதி தேவர்களிடம் கூறினார். பரமபுருஷ பகவானின் ஆதரவைப்
பெறுவதுதான் அவர்களுடைய ஒரே நம்பிக்கையாக இருந்தது. உண்மையில், இதைத்தவிர வேறு வழியும்
இருக்கவில்லை. இதன் விளைவாக, சுவர்க்க லோகங்களை விட்டு வெளியேறி, வேறெங்காவது மறைந்திருக்கும்படி
பிருஹஸ்பதி தேவர்களுக்கு அறிவுரை கூறினார். அவரது உத்தரவை தேவர்கள் பின்பற்றினர். பலி
மகாராஜனோ, தமது சகாக்களுடன் இந்திரனின் இராஜ்யம் முழுவதையும் பெற்றார். பிருகு முனியின்
சந்ததியினர் தங்களது சீடரான பலி மகாராஜனிடம் மிகவும் அன்பு கொண்டிருந்ததால், அவரை நூறு
அஸ்வமேத - யாகங்களைச் செய்வதில் ஈடுபடுத்தினர். இவ்விதமாக, பலி சுவர்க்க லோகங்களின்
செல்வங்களை அனுபவித்தார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment