பலி மகாராஜன் பகவானால் கைது செய்யப்படுதல்

 


 ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 

பாகம் 7

 

பலி மகாராஜன் பகவானால் கைது செய்யப்படுதல்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


பலி மகாராஜனின் பெருமைகளை பகவான் விஷ்ணு விளம்பரப்படுத்த விரும்பினார். எனவே பகவானின் மூன்றாவது அடி சம்பந்தமாக, தமது வாக்கை நிறைவேற்றத் தவறிய பலி மகாராஜனை பகவான் எப்படி கைது செய்தார் என்பதை இவ்வத்தியாயம் விவரிக்கின்றது.

இரண்டாவது அடியினால் பரமபுருஷர் பிரபஞ்சத்தின் மிகவுயர்ந்த கிரகமாகிய பிரம்ம லோகத்தையும் அடைந்து, அதன் அழகைத் தமது பாத விரல்களின் நகங்களிலிருந்து தோன்றிய பிரகாசத்தினால் மங்கச் செய்துவிட்டார். இவ்வாறாக, மரீசியைப் போன்ற சிறந்த முனிவர்களாலும், எல்லா உயர் கிரகங்களின் அதிபதிகளாலும் சூழப்பட்டிருந்த பிரம்மதேவர், தமது பணிவான வணக்கங்களை பகவானுக்குச் சமர்ப்பித்து அவரை வழிபட்டார். பகவானின் பாதங்களை அவர்கள் கழுவி, எல்லாப் பொருட்களைக் கொண்டும் அவர்கள் பகவானை வழிபட்டனர். ரிக்ஷராஜனான ஜாம்பவான் பகவானுடைய பெருமைகளை ஒலிக்கச் செய்வதற்காக தனது தும் சங்கீதக் கருவியை இசைத்தார். பலி மகாராஜனின் உடைமைகள் அனைத்தும் பறித்துக் கொள்ளப்பட்டதைக் கண்ட அசுரர்கள் பெருங்கோபம் கொண்டனர். பலி மகாராஜன் அவர்களை பகவான் விஷ்ணுவிற்கு எதிராக ஆயுதங்களை எடுக்க வேண்டாமென எச்சரித்த போதிலும், அவர்கள் அதைச் செய்தனர். ஆயினும் அவர்களனைவரும் பகவான் விஷ்ணுவின் நித்திய சகாக்களால் தோற்கடிக்கப்பட்டனர். பிறகு பலி மகாராஜனின் உத்தரவுக்கிணங்க, அவர்களனைவரும் பிரபஞ்சத்தின் பாதாள லோகங்களுக்குச் சென்றனர். பகவான் விஷ்ணுவின் வாகனமாகிய கருடன் பகவானின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, உடனே பலி மகாராஜனை வருணதேவனின் கயிறுகளினால் சிறைப்படுத்தினார். நிராதரவான நிலைக்கு பலி மகாராஜன் தாழ்த்தப்பட்ட போது, அவரிடம் பகவான் விஷ்ணு மூன்றாவது அடிக்கான நிலம் எங்கே என்று கேட்டார். பலி மகாராஜனின் திடமான நோக்கத்தையும், நேர்மையையும் பகவான் விஷ்ணு பாராட்டினார். இதனால் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய பலி மகாராஜனுக்கு, சுவர்க்க லோகங்களை விட மிகச் சிறந்ததான, சுதள லோகமே பொருத்தமாக இருக்கும் என்று தீர்மானித்தார்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8  / அத்தியாயம் 21 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more