மொழிபெயர்ப்பு
உணவு
உண்டு தனது தாகம் தணிந்தபின் மன்னர் புரஞ்சனன் தம் மனமெங்கும் மகிழ்ச்சி பரவுவதை உணர்ந்தார்.
உயர் உணர்விற்கு உயர்த்தப்படுவதற்குப் பதிலாக அவர் மன்மதலால் கவரப்பட்டார். தன்னை இல்லற
வாழ்வில் மிகவும் திருப்தியுடன் வைத்திருக்கும் தன் மனைவியைத் தேடும் ஆசையினால் அவர்
உந்தப்பட்டார்.
பொருளுரை
தன்னை
கிருஷ்ண உணர்வு நிலைக்கு உயர்த்தக்கொள்ள விரும்புபவனுக்கு இச்சுலோகம் மிகவும் இன்றியமையாததாகும்.
ஒருவன் தன் ஆன்மீக குருவினால் தீட்சையளிக்கப்படும் பொழுது அவன்தன் பழக்கவழக்கங்கள்
மாற்றுகிறான். விரும்பத்தகாத உணவுகளை உண்பது அல்லது புலால் உண்பது, மது வருந்துதல்,
தவறான பாலுறவு கொள்ளுதல், சூதாடுதல் போன்றவற்றில் அவன் ஈடுபடுவதில்லை. “ஸாத்துவிக ஆகாரம்”
என்று சாத்திரங்களில் கோதுமை, அரிசி, காய்கறிகள், பழங்கள், பால், சர்க்கரை போன்றவைகளினாலான
உணவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆயினும் சில நேரங்களில் தீட்சை பெற்றவன் பிரஸாதம்
என்ற பெயரில் ஆடம்பரமான உணவுகளை உண்கிறான். அவன் தனது கடந்தகால பாவ வாழ்ககையினால் மன்மதனால்
கவரப்பட்டு, சிறந்த உணவுகளைத் தின்னும் பெருந்தீனிக்காரனாகிறான். கிருஷ்ண உணர்விற்குப்
புதிதாக வரும் ஒருவன் பெருந்தீனி தின்பதினால் சீர்குலைகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தூய கிருஷ்ண உணர்விற்கு உயர்த்தப்படுவதற்குப் பதிலாக அவன் மன்மதக் கவர்ச்சிக்கு ஆளாகிறான்.
பிரம்மச்சாரி என்பவன் பெண்களினால் கிளர்ச்சியடைகிறான். வானப்பிரஸ்தன் தன் மனைவியுடன்
பாலுறவு கொள்ளும் கவர்ச்சிக்கும் ஆளாகிறான். அல்லது அவன் வேறொரு மனைவியைத் தேடத் தொடங்கலாம்.
சில உணர்ச்சி கொந்தளிப்பினால் அவன் தன் மனைவியை நீங்கி ஆன்மீககுரு மற்றும் பக்தர்களுடன்
தொடர்பு கொள்ளலாம். ஆயினும் அவனதுகடந்த கால பாவ வாழ்க்கையினால் அவன் நிலைத்திருக்க
மாட்டான். கிருஷ்ண உணர்விற்கு உயர்வதற்குப் பதிலாக அவன் தரம் தாழ்கிறான். மன்மதனால்
கவரப்பட்டதினால் அவன் பாலுறவு இன்பத்திற்காக மற்றொரு மனைவியைத் தேடுகிறான். கிருஷ்ண
உணர்வு பாதையிலிருந்து ஒரு புதிய பக்தன் உலக வாழ்வில் வீழ்வது பற்றி நாரதமுனிவரால்
ஸ்ரீமத் பாகவதத்தில் (1.5.17) விளக்கப்பட்டிருக்கிறது.
இது
குறிப்பிடுவது என்னவென்றால் ஒரு புதிய பக்தன் அவனது முதிர்ச்சியின்மையினால் கிருஷ்ண
உணர்வுப் பாதையின் தரம் தாழ்ந்தாலும், கிருஷ்ணருக்கு அவன் செய்யும் தொண்டு வீணாகப்போவதில்லை.
ஒருவன் தனது குடும்ப கடமையில் அல்லது சமுதாயக் கடமையில் ஊறியவனாக இருந்து கிருஷ்ண உணர்வு
அடையாதவனாக இருந்தான் என்றால் அவன் பெறப்போகும் நன்மை எதுவுமில்லை. கிருஷ்ண உணர்விற்கு
வரும் ஒருவன் தடைசெய்யப்பட்டிருக்கும் செயல்களில் மிகவும் எச்சரிக்கையுடனும் விலகியும்
இருத்தல்வேண்டும். இது ரூப கோஸ்வாமியினால் அவரது “உபதே ஸாம்ருதத்தில்” விளக்கப்பட்டிருக்கிறது.
ஒரு
புதிய பக்தன் தேவைக்கு அதிகமான உண்ணவோ, பணம் சேர்க்கவோ கூடாது. தேவைக்கு மேல் உண்பதும்
பொருள் சேர்ப்பதும் “அத்யாஹாரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த “அத்யாஹாரத்திற்காக”
ஒருவன் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கிறது. இதுவே “ப்ரயாஸம்” எனப்படும். மேலோட்டமாக
ஒருவன் தன்னை ஒழுங்குமுறை விதிகளிடத்து நம்பிக்கையுடையவனாகக் காட்டிக் கொள்ளலாம். ஆயினும்
அவன் அவ்விதிகளிடத்து தன்னை நிலையாக இணைத்துக் கொள்வதில்லை. இதுவே “நியமாக்ரஹம்” என்றழைக்கப்படுகிறது.
விரும்பத்தகாத மனிதர்களுடன் அல்லது ஜன ஸங்கத்துடன் கலப்பதினால் ஆசை மற்றும் பேராசை
என்னும் கறைபடிந்தவனாகி பக்தித் தொண்டு என்னும் பாதையிலிருந்து கீழே வீழ்ந்துவிடுகிறான்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 4.26.13 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment