யக்ஞத்துவஜா என்ற அரசன், தான் வாழ்ந்த காலத்தில் பல இடங்களில் விஷ்ணு கோயில் கட்டினான். ரேவா நதிக் கரையிலும் ஒரு கோயில் கட்டினான். அவன் கட்டிய எல்லாக் கோயில்களிலும், கோயிலைச் சுத்தம் செய்யும் பணியும், இரவில் விளக்கேற்றும் பணியும் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்பதற்காகப் பெருமுயற்சி செய்தான்.
விதஹோத்ரா என்பவர் அந்த கோவில் புரோகிதராக இருந்தார் அவர் யக்ஞத்துவஜாவிடம், “அரசே! விஷ்ணு கைங்கர்யம் என்பதைப் பல வழிகளில் செய்யலாம். அவற்றை எல்லாம் விட்டுவிட்டுக் திருக்கோயிலைத் தூய்மை செய்தல், விளக்கேற்றுதல் ஆகிய இரு காரியங்களுக்காக மட்டும் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமா? அது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை?” என்று கேட்டான். இதைக் கேட்ட யக்ஞத்துவஜா அந்த புரோகிதரை நோக்கிச் பதில் உரைக்க ஆரம்பித்தார்..
"விதஹோத்ரரே ! எனக்கு ஜதீஸ்மரா என்ற முற்பிறப்பை உணரும் ஆற்றல் உண்டு. அதனால்தான் இவ்வாறு செய்கிறேன். சத்திய யுகத்தில் ரைவதா என்ற ஒரு பிராமணன் இருந்தான். வேத சாஸ்திரங்கள் அனைத்தும் கற்று தேர்தவராக விளங்கினர். ஆனால் அவர் கற்றதை அவனது வாழ்கையில் செயல்படுத்தியதே இல்லை . எத்தனை குற்றங்கள் புரிய முடியுமோ அத்தனையும் புரிந்தான். எந்தெந்தப் பொருள்களை பிராமணன் தொடக் கூடாதோ அவற்றையெல்லாம் வியாபாரப் பொருளாக்கி விற்றான். அந்த பிராமணனுடைய வாழ்க்கை முறையைப் பொறுக்காத மற்ற பிராமணர்களும் ஊர்க்காரர்களும் அவனை ஊரை விட்டே விரட்டினர். அந்த பிராமணன் எல்லாவற்றையும் இழந்து ஊர் ஊராக சுற்றி திரிந்தான். அதுமட்டுமின்றி அவனுக்கு கடுமையான நோய் உண்டானது. நோய் தாக்கம் அதிகமாகி பரிதாபமாக இறந்தான்..
ரைவதனுடைய மனைவி பந்துமதி என்பவளும் பிராமணர்களுக்குரிய வாழ்க்கையை மேற்கொள்ளாமல், தன் கணவனைப் போலவே தவறான வழிகளில் காலத்தை ஓட்டினாள்.
ரைவதனுக்கும், பந்துமதிக்கும் தண்டகேது என்றொரு பிள்ளை இருந்தான். அவனும் பெற்றோர்கள் சென்ற வழிகளிலேயே சென்று பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டான். மது அருந்துதல், பிறரது உடமைகளை அபகரித்தல், இப்படி கொலை கொள்கைகளில் ஈடுபட்டு மிகவும் மோசமானவனாக இருந்தான்.
ஒரு நாள் இரவு ஒய்வெடுப்பதற்காக ஒரு விஷ்ணு கோயிலுக்குச் சென்றான். தான் படுப்பதற்கு ஒர் இடம் தேவைப்பட்டதால் தன்னுடைய உடையைக் கொண்டு கோயிலைச் சுத்தம் செய்தான். இரவில் வெளிச்சம் தெரிய வேண்டும் என்பதற்காக விஷ்ணுவின் எதிரே இருந்த விளக்கைத் தூண்டி விட்டான். இந்த ஏற்பாடுகளை அவன் செய்து கொண்டிருக்கும் போது, அந்த ஊர்க் காவலர்கள் அவனைத் திருடன் என்று கருதிக் அடித்து கொன்று விட்டார்கள். உடனே சொர்க்க பிராப்தி அடைந்தான் . சொர்கத்தில் இன்பம் அனுபவித்த தண்டகேது மறுபடியும் பூலோகத்தில் ஒர் அரசனாகப் பிறந்தான். பழம் பிறப்பு நினைப்புடனேயே அவன் பிறந்தான். அவன் வேறு யாருமல்ல; நான்தான்.”என்று சொல்லி முடித்தார்.
கோயிலைத் துப்புறவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தான் படுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் சுத்தம் செய்தான். விளக்கைத் தூண்ட வேண்டும் என்றில்லாமல் தனக்கு வெளிச்சம் வேண்டும் என்பதற்காகத் தூண்டி விட்டான். அனிச்சையான இந்த இரண்டு செயல்களுக்காக அவன் சொர்க்க லோகம் சென்று சில காலம் இன்பம் அனுபவித்தான் என்றால், விருப்பத்தோடு இந்தத் திருப்பணிகளைச் செய்யும் நான் எவ்வளவு புண்ணியத்தைச் சேர்ப்பேன் என்பது உங்களுக்குத் இப்போது புரிந்திருக்கும் அல்லவா? புரோகிதர் விதஹோத்ரா இந்த மகத்தான சேவையின் மகிமைகளை கேட்டு தன்னுடைய பகவத் கைங்கர்யத்தை மிகுந்த உற்சாகத்துடனும், மிகுந்த கவனத்துடனும் ,பக்தி உணர்வுடன் சேவைபுரிந்தார்
வாழ்க்கையின் துன்பங்களை வெல்ல வேண்டுமானால், பகவான் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லை. மேலும் விஷ்ணு பக்தர்களுக்கு சேவை புரிவதன் மூலம் பகவான் விஷ்ணுவின் கருணைக்கும் அன்பிற்கும் , அனுகிரகத்திற்கும் உரிமையாளர் ஆகிறார்.மேலும் அனைத்து புண்ணியமும் பெற்றவர் ஆகிறார் .ஒருவர் விஷ்ணுவின் பக்தர்களுக்கு சேவை செய்தால், அவரது இருபத்தி ஒன்று பரம்பரைகள் ஏற்றம் பெறுகின்றனர். விஷ்ணு வழிபாடு செய்யும் வீட்டில் சகல ஐஸ்வர்யமும் பெற்றவர் ஆகிறார்.மேலும் சகல தேவர்களும், மஹாலட்சுமியும் எப்போதும் அவ்விடத்தில் இருப்பார்கள். விஷ்ணுவுக்குப் மிகவும் பிரியமான துளசி செடிகளை வளர்த்தி பராமரிப்பு செய்யும் சேவைகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் உள்ளம் தூய்மையடைந்து வெகு விரைவிலே பகவான் விஷ்ணுவின் பிரியமான பக்தராகி வைகுண்டத்தில் நித்திய வாசம் புரிந்து அவருக்கு நித்தியமாக அன்பு தொண்டு புரிகிறார்.
நாரத புராணம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment