“எல்லா வகையான வழிபாட்டிலும் பகவான் விஷ்ணு
வழிபாடு சிறந்ததாகும். பகவான் விஷ்ணுவின் வழிபாட்டை விடச் சிறந்தது அவரது பக்தர்களான,
வைஷ்ணவர்களை வழிபடுவதாகும்.” பௌதிக ஆசைகளில் பற்றுக் கொண்டவர்களால் வழிபடப்படும் தேவர்கள்
பலர் உள்ளனர் (காமைஸ் தைஸ் தைர் ஹ்ருத - ஞானா: ப்ரபத்யந்தே ‘ன்ய - தேவதா:) மக்கள் பலவிதமான
பௌதிக ஆசைகளால் சங்கடத்திற்கு ஆளாகும் போது, அவர்கள் வெவ்வேறு பலன்களை அடைவதற்காக சிவபெருமான்,
பிரம்ம தேவர், காளி, துர்கா, கணேஷர் மற்றும் சூரியன் ஆகியோரை வழிபடுகின்றனர். ஆயினும்,
பகவான் விஷ்ணுவை வழிபடுவதாலேயே ஒருவரால் இப்பலன்கள் அனைத்தையும் ஒரே சமயத்தில் அடைந்து
விட முடியும். பாகவதத்தில் (4.31.14) குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல்:
“ஒரு மரத்தின் வேருக்கு நீரூற்றுவதாலேயே, அதன்
அடிமரம், இலைகள், பழங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை ஒருவர் வளர்க்கிறார். மேலும் வயிற்றுக்கு
உணவளிப்பதாலேயே, ஒருவர் எல்லா உடலுறுப்புக்களையும் திருப்திப்படுத்துகிறார். அதைப்போலவே,
பகவான் விஷ்ணுவை வழிபடுவதன் மூலமாக ஒருவரால் அனைவரையும் திருப்திப்படுத்த முடியும்.”
கிருஷ்ண பக்தி இயக்கம் அளவுக்கு மீறிய இனப்பற்று கொண்ட ஒரு சமய இயக்கமல்ல. மாறாக, இது
உலகிலுள்ள எல்லோரையும் அரவணைக்கும், பொதுநலத் தொண்டுகளுக்கென உள்ளதாகும். ஜாதி, இனம்,
மதம் அல்லது தேசம் என்ற பாகுபாடின்றி எவரும் இந்த இயக்கத்தில் சேரலாம். விஷ்ணு - தத்வங்களுக்கு
எல்லாம் ஆதியானவரும், முழுமுதற்கடவுளுமாகிய கிருஷ்ணரை வழிபடுவதில் ஒருவர் பயிற்றுவிக்கப்பட்டிருந்தால்,
அவர் எல்லாத் துறைகளிலும் பூரண திருப்தியும், பக்குவமும் உள்ளவராக ஆகலாம்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8.5.49 - பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment