மானிடப் பிறப்பு தன்னுணர்வு பெறுவதற்குச் சிறந்த வாய்ப்பிளைக் கொடுக்கிறது. ஒருவன் தேவலோகத்தில் தேவனாகப் பிறக்கலாம். ஆயினும் வசதிகள் ஏராளமாக அங்கே இருக்கின்ற காரணத்தினால் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து ஒருவனால் விடுதலை பெற முடியாது. இப்பூலோகத்தில் கூட வசதி மிக்கவன் பொதுவாக கிருஷ்ண உணர்வினை மேற்கொள்வதில்லை. உலகப் பிடியிலிருந்து விடுதலை பெறுவதில் உண்மையான விருப்பமுடைய புத்திமான் தூய பக்தர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அத்தொடர்பினால் ஒருவன் பொருள், பொன் என்னும் உலகக் கவர்ச்சியிலிருந்து படிப்படியாக விடுதலை பெற முடியும். உலகப் பற்றின் அடிப்படை விதிகளாக இருப்பது, பணமும், பெண்களுமே ஆவர். ஸ்ரீ சைதன்ய மகா பிரபு அதனால்தான் வீடு பேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைய வேண்டுமென்று உண்மையில் விரும்புவோர் இறை உலகில் நுழைவதற்கானத் தகுதியைப் பெற பணம் மற்றும் பெண்களைத் துறக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார். பணமும் பெண்களும் பகவானின் தொண்டிற்கே முற்றிலும் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு பயன்படுத்துபவன் உலகத் தொடர்பிலிருந்து விடுதலை பெற முடியும். “ஸதாம் ப்ரஸங்கான் மம வீர்ய ஸம்விதோ பவந்தி ஹ்ருத் கர்ண ரஸாயனா: கதா:” (பாக. 3.25.25) பக்தர்களுடன் கொள்ளும் தொடர்பின் மூலமே முழுமுதற் கடவுளின் சுவையை ஒருவனால் அனுபவிக்க முடியும். ஒரு தூய பக்தனுடன் கொள்ளும் சிறிய தொடர்பினால் மட்டுமே முழுமுதற் கடவுளை அடையும் பயணத்தில் ஒருவனால் வெற்றி பெற முடியும்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 5.13.21 - பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment