ஒரு கழுதையும், புலியும் காட்டில் பேசிக்கொண்டே நடந்தன. வழியில் பச்சைப் பசேல் என்று புல் வெளியைப் பார்த்த கழுதை, “ஆஹா, நீல நிறத்தில் இந்தப் புல்வெளி எத்தனை அழகாக இருக்கிறது” என்றது. அதிர்ச்சியடைந்த புலி, “என்ன உளறுகிறாய்?, பச்சை நிறத்திலிருக்கும் புல்லைப் பார்த்து நீலம் என்று சொல்கிறாயே” என்று கேட்டது.
“உளறுவது நீயா அல்லது நானா? புல் நீல நிறம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை” என்றது கழுதை. புலி, கழுதைக்கிடையே, வாக்குவாதம் தடிக்க, இரண்டும் காட்டின் ராஜா சிங்கத்திடம் சென்று தங்களுடைய சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதென முடிவு செய்தன. சிங்கத்தின் சிம்மாசனத்தை அடைந்த கழுதை பெருத்த குரலில், “அரசே, புல்லின் நிறம் நீலம் என்பதுதானே சரி” என்று கேட்டது.
“உன் மனதிற்கு புல் நீல நிறமாகத் தோன்றினால், அது நீல நிறம்தான்” என்றது சிங்கம்.
“சிங்கராஜா, புல் நீல நிறம் என்பதை புலி ஒத்துக்கொள்ள மறுக்கிறது. புல்லின் நிறம் பச்சை என்று தேவையற்ற வாதம் செய்கிறது. உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிற புலிக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது.
“புலி காட்டை மூன்று முறை சுற்றி வர வேண்டும்” என்று சிங்க ராஜா கட்டளையிட, கழுதை மகிழ்ச்சியுடன் தன் வழியே சென்றது.
புலி, சிங்க ராஜாவிடம், “அரசே, உங்களுக்குத் தெரியும் புல் பச்சை நிறம் என்று. நான் சொன்னதுதான் சரியென்றும் தெரியும். அப்படியிருந்தும் தவறு செய்யாத எனக்கு எதற்கு தண்டனை” என்று கேட்டது.
சிங்கம் சொல்லியது. :”நீ புத்திசாலியான மிருகம். உனக்கு நன்றாகத் தெரியும் புல்லின் நிறம் பச்சை என்று. அப்படித் தெரிந்தும் உன்னைவிட அறிவில் குறைந்த கழுதையுடன் வாதம் செய்தாய். அதுவுமில்லாமல், இந்த கழுதையுடன் அரச சபைக்கு மத்தியஸ்தம் செய்துகொள்ள வந்த காரணத்தால், இந்த சபையின் நேரத்தையும் வீணடித்தாய். அதற்காகத்தான் இந்த தண்டனை.”
இந்த கதையால் கிடைக்கும் நீதி என்ன?
நம்முடைய வாழ்க்கையில் பல அறிவாளிகள், தங்களுடைய பொன்னான நேரத்தை, தங்களைவிட அறிவு குறைந்தவர்களிடமும், “தான் சொல்வதுதான் சரி” என்று நம்புகின்ற தான்தோன்றி மனிதர்களிடமும் தேவையற்ற வாதம் செய்து,வீணடிக்கிறார்கள்.
அறிவாளியுடன் செய்கின்ற வாதம், நம்முடைய கருத்தில் தெளிவு பிறக்க உதவும். நம் சிந்தனைகளை உயர்த்தும். ஆனால், “எனக்கு எல்லாம் தெரியும், நானே அறிவாளி” என்று நம்புபவன் செய்வது வாதமல்ல; அது வரட்டுப் பிடிவாதம். இவர்களுடன் வாதமிட்டு நம் நேரத்தையும் நம் சக்தியையும் வீணடிப்பது அறிவற்ற செயலாகும்.
தூய பக்தர்களின் அடையாளம்
மொழிபெயர்ப்பு
இங்கே குறிப்பிடப்படும் தூய பக்தன் யாவர்?
தூய பக்தர்களின் கூட்டத்தில் உலக விஷயங்களான அரசியல்,
சமூகவியல் பற்றிய கலந்துரையாடல் பற்றிய கேள்விக்கே இடமில்லை.
தூய பக்தர்களின் கூட்டத்தில் முழுமுதற் கடவுளின் குணங்கள்,
வடிவங்கள்,
லீலைகள் பற்றிய கலந்துரையாடல் மட்டுமே இடம் பெறும்.
அவரே முழு கவனத்துடன் போற்றி வளர்க்கப்படுகிறார்.
தூய பக்தர்களின் கூட்டத்தில் இவற்றை மரியாதையுடன் தொடர்ந்து கேட்பதினால் முழு மெய்ப்பொருளுடன் இணைய வேண்டும் என்று விரும்புபவன் கூட அந்த எண்ணத்தைக் கைவிட்டு படிப்படியாக வாசுதேவரின் தொண்டில் பற்றுடையவனாகிறான்.
தூய பக்தர்களின் அடையாளம் என்னவென்று இங்கே விளக்கப்பட்டிருக்கிறது.
தூய பக்தன் உலகியல் விஷயங்களில் ஆர்வமுடையவனாக இருப்பதில்லை.
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தனது பக்தர்கள் உலக விஷங்கள் பற்றி பேசக் கூடாது என்று கடுமையான தடை விதித்திருந்தார்.
“க்ராம்ய வார்தா நா கஹிபே”
உலகம் பொருள் பற்றிய செய்திகளை தேவையின்றிப் பேசக்கூடாது.
இவ்வாறு பேசி ஒருவன் தனது காலத்தை வீணாக்கக் கூடாது.
ஒரு பக்தனின் வாழ்வில் இது முக்கியமானதாகும்.
முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதைவிட ஒரு பக்தனிடம் வேறு ஆசை இருத்தல் கூடாது.
கிருஷ்ண பக்தி இயக்கம்,
மக்களை ஒர்நாளில் இருபத்தி நான்கு மணி நேரமும் பகவானின் பெருமையில் ஈடுபட்டுச் சேவை செய்யவே,
துவங்கப்பட்டதாகும்.
இம்மையத்தின் மாணவர்கள் கிருஷ்ண உணர்வை வளர்ப்பதில் அதிகாலை ஐந்து முதல் இரவு பத்து மணிவரை ஈடுபடுகின்றனர்.
தேவையற்ற அரசியல்,
சமூகவியல்,
நடப்புச் செய்திகள் பேசுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இருப்பதில்லை.
இவையெல்லாம் தத்தமது பாதையில் செல்வன.
ஒரு பக்தனின் முழுக் கவனம் கிருஷ்ணருக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தொண்டு செய்வதில் மட்டுமே இருக்கும்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 5.12.13 - பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment