பௌதீக நன்மை பெறுவதற்காக பந்தப்பட்ட ஆத்மா போலி சாமியார்களையும், யோகிகளையும், துறவிகளையும் மலிவான ஆசிகளைப் பெற அணுகுகிறான்
ஆன்மீக உணர்விற்குத் தங்கள் சொந்த வழிகளை உருவாக்கும் ஏமாற்றுக்காரர்கள் எப்போதும் இருக்கின்றனர். சில பௌதீக நன்மை பெறுவதற்காக பந்தப்பட்ட ஆத்மா இதுபோன்ற போலி சாமியார்களையும், யோகிகளையும், துறவிகளையும் மலிவான ஆசிகளைப் பெற அணுகுகிறான். ஆனால் அவன் ஆன்மீகமான அல்லது பௌதீகமான எந்தவொரு நன்மையும் அவர்களிடமிருந்து பெறுவதில்லை. இக்காலத்தில் மந்திர, தந்திரங்கள் செய்யும் ஏராளமான ஏமாற்றுக்காரர்கள் இருக்கின்றனர். தங்கள் அடியவர்களை ஆச்சரியத்தில் ஆழ்ந்த அவர்கள் தங்கத்தை கூட உண்டாக்கிக் காட்டுகின்றனர். அவர்கள் அடியவர்களும் அவர்களை கடவுள் என்று நம்புகின்றனர். கலியுகத்தில் இதுபோன்ற ஏமாற்று முதன்மையாக இருக்கின்றது. அதனால்தான் விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர உண்மையான குரு யார் என்று பின்வருமாறு விளக்குகிறார்.
பௌதீக உலகில் எரியும் நெருப்பான வாழ்க்கைப் போராட்டத்தினை அணைக்கக் கூடிய குருவை ஒருவன் அணுகவேண்டும். மக்கள் ஏமாற விரும்பி மந்திர தந்திரம் செய்யும் யோகிகளிடமும், சுவாமிகளிடமும் செல்கின்றனர். ஆனால் மந்திர தந்திரங்கள் பௌதீக உலகின் துன்பங்களைப் போக்குவதில்லை. கடவுளாவதற்குத் தங்கத்தை உண்டாக்கும் சாமர்த்தியமே அடிப்படை என்றால் டன்டன்னாகத் தங்கத்தைத் தன்னுள் வைத்திருக்கும் இப்பிரபஞ்சத்தின் எஜமானரானக் கிருஷ்ணரை ஏன் கடவுளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது? முன்பே குறிப்பிடப்பட்டிருப்பதுபோல் தங்கத்தின் நிறமானது சதுப்பு நிலத்தில் தோன்றும் ஒளியுடனும், மஞ்சள்நிற மலத்துடனும் ஒப்பிடப்பட்டிருக்கிறது அதனால் தங்கத்தை உண்டு பண்ணும் குருக்களிடம் ஒருவன் கவர்ச்சியடையக் கூடாது. மாறாக ஜடபாதர் போன்ற பக்தரை அடைவதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். ஜடபாதர் ரஹுகண மகாராஜாவிற்கு நன்கு உபதேசித்ததினாலேயே அவர் உடற்கருத்திலிருந்து விடுதலை பெற்றார். போலிகுருவை ஏற்றுக் கொள்வதினால் ஒருவன் மகிழ்ச்சி பெறமுடியாது. ஸ்ரீமத் பாகவதத்தில் அறிவுறுத்தியுள்ளபடி ஒரு குருவினை ஏற்றுக் கொள்ள வேண்டும் (11.3.21). “தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிஜ்ஞாஸு ஸ்ரேய உத்தமத்”. வாழ்வின் உயர்ந்த நலன்களைப் பற்றி அறிந்துகொள்வதற்காக ஒருவன் ஒர் உண்மையான குருவை அணுக வேண்டும். அப்படிப்பட்ட குரு பின்வருமாறு விளக்கப்படுகிறார். “ஸாபதே பரே ச நிஷ்னாதம்”. இவர் போன்ற குரு தங்கத்தையோ அல்லது ஏமாற்று மொழிகளையோ உண்டாக்குவதில்லை. இவர் வேத ஞான முடிவுகளில் கரை கண்டவராக இருப்பார் (வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய). இவர் பௌதீக மாசுக்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று முற்றிலும் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபட்டிருப்பார். இவர் போன்ற குருவின் தாமரைத் திருவடிகளின் தூசியினைப் பெறும் திறனுடையவனாக ஒருவன் இருந்தானென்றால் அவன் வாழ்க்கை வெற்றிபெறும். இல்லையேல் அவனுடைய வாழ்க்கை இப்பிறப்பு மறுப்பிறப்பு இரண்டிலும் குழப்பமுறும்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 5.14.13 - பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment